Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
தயிர் சிக்கன் கிரேவி
இன்று நாம் பார்க்கப் போவது தயிர் மற்றும் சிக்கனைக் கொண்டு எப்படி ஒரு கிரேவி செய்வது என்பதைப் பற்றி தான். இந்த தயிர் சிக்கன் கிரேவி சப்பாத்தி, சாதம், பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
விடுமுறை வந்தாலே அனைவருக்கும் குஷியாகிவிடும். ஏனெனில் விடுமுறை நாளில் நமக்கு பிடித்ததை செய்து பொறுமையாக சுவைக்க முடியும். அதுவும் அசைவ பிரியர் என்றால், அவர்களுக்கு விடுமுறை நாட்கள் வந்தாலே, வித்தியாசமாக என்ன ட்ரை பண்ணலாம் என்று யோசிப்பார்கள். நீங்களும் அப்படிப்பட்டவரா? அப்படியானால் இந்த ரெசிபி உங்களுக்கானது. ஏனெனில் இன்று நாம் பார்க்கப் போவது தயிர் மற்றும் சிக்கனைக் கொண்டு எப்படி ஒரு கிரேவி செய்வது என்பதைப் பற்றி தான்.

இந்த தயிர் சிக்கன் கிரேவி சப்பாத்தி, சாதம், பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு தயிர் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் சிக்கன் கிரேவி/தஹி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 பெரிய துண்டு
* பெரிய வெங்காயம் -2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 கப்
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
