Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும்
Vallarai Keerai Chutney Recipe in Tamil: கீரையை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது என்பதை அறிவோம். அதிலும் சில கீரைகள் நாம் எதிர்பார்ப்பதை விட ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அப்படி ஒரு மிகவும் ஆரோக்கியமான கீரைதான் வல்லாரைக் கீரை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நியாபக சக்தி அதிகரிப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அடையலாம். பொதுவாக வல்லாரைக் கீரையை நீங்கள் பொரியல், கூட்டு என்று செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் வல்லாரை கீரையை வைத்து அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம் தெரியுமா?

இந்த வல்லாரைக் கீரை சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும், அதுமட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவர்களுக்கு இந்த வல்லாரைக் கீரையை அடிக்கடி கொடுத்து வந்தால், அவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் இரும்புச்சத்து அதிகரிக்கும். அதுவும் வல்லாரைக் கீரையை சாப்பிட மறுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு, அதைக் கொண்டு சட்னி செய்து கொடுக்கும் போது, கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு வல்லாரைக் கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வல்லாரைக் கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 கப் வல்லாரை கீரை
- 10 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 5 வர மிளகாய்
- அரை ஸ்பூன் பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் வர மிளகாய், பெருங்காயம் மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் அவற்றை எண்ணெயிலிருந்து எடுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து, நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்ததும் கடாயில் வல்லாரைக் கீரையைச் சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும். சில நிமிடங்களில் கீரை சுருங்கி விடும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். கீரை நன்றாக வதங்கியிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டுக்கு மாற்றி ஆற வைக்கவும்.
- வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி 2 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே மிகவும் குறைவான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி இட்லி, தோசை அல்லது சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications











