Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்..
Pachamilagai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை டிபனாக இட்லி, தோசை தான் இருக்குமா? ஒவ்வொரு நாளும் அந்த இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷை முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி வித்தியாசமான சுவையுடைய சட்னியை எதிர்பார்க்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த தேங்காய் சட்னியின் சுவையைக் கொண்ட பச்சை மிளகாய் சட்னியை செய்து கொடுங்கள்.

இந்த சட்னியில் பச்சை மிளகாயை சற்று அதிகமாக சேர்க்க வேண்டும். ஆனால் இந்த பச்சை மிளகாயின் காரம் தெரியாமல் இருக்க, அதை எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். இப்படி வதக்கி செய்யும் போது, பச்சை மிளகாயின் ப்ளேவர் இருக்குமே தவிர, காரம் அதிகம் இருக்காது. இந்த சட்னியை இட்லி, தோசைக்கு செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அதிகமாக சாப்பிடுவார்கள்.
இந்த பச்சை மிளகாய் சட்னி குறித்து கேஆர்ஆர் கிச்சன் என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 5 பெரிய பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு, 1 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் 5 பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து வெள்ளையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 25 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு மற்றும் 1 கொத்து
கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிய துண்டு புளியை சேர்த்து, அத்துடன் 3 டேபிள்
ஸ்பூன் தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு தேவையான அளவு
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை மற்றும் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து சேர்த்து கலந்தால், பச்சை மிளகாய் சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications