Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
Mars Transit In Revati Nakshatra On 24 April 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். அதுமட்டுமின்றி 15 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அந்த வகையில் செவ்வாய் ஏப்ரல் 24 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றுகிறார். அதுவும் அப்போது அவர் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த புதனின் நட்சத்திரத்தில் செவ்வாய் சுமார் 16 நாட்கள் வரை பயணிக்கவுள்ளார். செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சிலருக்கு மோசமாகவும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். ஆயினும் 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தங்கள் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ள செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் திடீரென்று உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். தலைமைத்துவ பண்புகள் மேம்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த 16 நாட்கள் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இருவருமே நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். மார்கெட்டிங், ஊடகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு அடுத்து வரும் நாட்கள் அற்புதமாக இருக்கும். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இனி உடல்நலம் மேம்பட்டு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்புள்ளது. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலைக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


