Latest Updates
-
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது
Ruchak Yog In May 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது மீன ராசியில் பயணித்து வரும் செவ்வாய், வருகிற மே 02 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.
இப்படி செவ்வாய் தனது சொந்த ராசிக்கு செல்வது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால், அதன் சக்தியும் செல்வாக்கும் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி செவ்வாய் சொந்த ராசிக்கு நுழைவதால் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மிகவும் சக்தி வாய்ந்த ருச்சக யோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தின் படி, இந்த ருச்சக யோகமானது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்குள் நுழையும் போது உருவாகும். இந்த யோகமானது தைரியம், தன்னம்பிக்கை, தலைமைத்துவத் திறன்கள் மற்றும் நிதி முன்னேற்றத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் புதிய சாதனைகளைப் படைப்பதோடு, வெற்றிகளையும், நிதி மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது மேஷ ராசிக்கு சென்று செவ்வாய் உருவாக்கும் ருச்சக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக யோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆற்றல்களும், முடிவெடுக்கும் திறன்களும் மேம்படும். நிதி நிலையும் வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். தெளிவான மனநிலையில் முக்கியமான முடிவுகளை திறம்பட எடுப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல்நலம் மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாயால் ருச்சக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அந்தஸ்து உயரும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொடர்பு கொள்ளும் திறன் மேம்படும். பல புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகள் எதிர்காலத்தில் பலனளிக்கும் வகையில் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாயால் ருச்சக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். இதன் மூலம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சட்டரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். செவ்வாயின் அருளால் பேச்சும், ஆளுமையும் மேம்படும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமையும் வலுவடையும். பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் முன்னேற்றமும் சாதனைகளும் நிறைந்த ஒரு காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


