Latest Updates
-
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
Ponnanganni Keerai Kootu Recipe In Tamil: கோடைக்காலத்தில் கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ஏனெனில் கீரைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மேலும் கீரைகள் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் கோடையில் சந்திக்கும் செரிமான பிரச்சனைகளையும் தடுக்கும். அதுவும் கோடைக்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு கீரை தான் பொன்னாங்கண்ணி கீரை.

இந்த கீரை சற்று கசப்புச் சுவையைக் கொண்டது. இருப்பினும், இது கோடையில் சந்திக்கும் உடல் சூட்டை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் கண்களுக்கும் மிகவும் நல்லது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை பொரியல், தொக்கு என்று செய்து சாப்பிடுவதை விட, பருப்பு சேர்த்து கூட்டு செய்தால், சுவையாக இருப்பதோடு, பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பொன்னாங்கண்ணி கீரை கூட்டு ரெசிபி குறித்து ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு பொன்னாங்கண்ணி கீரை கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொன்னாங்கண்ணி கீரை கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தக்காளி - 1/2 (நறுக்கியது)
* பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு
* துவரம் பருப்பு - 50 கிராம் (வேக வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
* வெல்லம் - சிறிது
அரைப்பதற்கு...
* பூண்டு- 1 பெரிய பல்
* பச்சை மிளகாய் - 1
* துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
* மல்லி - 10
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் பொன்னாங்கண்ணி கீரையை நீரில் கழுவி, அதை பொடியாக நறுக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் 1 பல் பூண்டு, 1 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய், 10 வரமல்லி, 1/4 டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிது
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு மண் சட்னி அல்லது வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு சேர்த்து, 1
வரமிளகாயை உடைத்து சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 சிட்டிகை
மஞ்சள் தூள் தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் பாதி தக்காளியை பொடியாக நறுக்கி, அதில் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து 2-3
நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி கிளறி, வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, நன்கு
கிளறி, பாதியாக மூடி 5 நிமிடம் நன்கு கீரையை வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் நல்ல மணத்திற்காகவும்
சுவைக்காகவும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி, சிறிது பொடித்த
வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை
கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











