Latest Updates
-
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
Egg Paya Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வழக்கமாக செய்வது போன்று சைடு டிஷ் செய்யாமல், சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சட்டென்று செய்யக்கூடியவாறான சைடு டிஷ்ஷை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டை சைடு டிஷ் செய்து கொடுக்குமாறு கேட்டால், வழக்கமாக செய்யும் முட்டை கிரேவியை செய்யாமல், ஒருமுறை முட்டை பாயா செய்யுங்கள்.

இந்த முட்டை பாயா செய்வதற்கு ஒரு மசாலா மட்டும் வதக்கி அரைத்தால் போதும், சட்டென்று செய்துவிடலாம். இந்த முட்டை பாயா சப்பாத்திக்கு மட்டுமின்றி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை பாயா வேலை செல்வோருக்கும், பேச்சுலர்களுக்கும் ஏற்ற ஒரு அருமையான சைடு டிஷ். ஏனெனில் அந்த அளவில் இது வேகமாக செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.
இந்த முட்டை பாயா ரெசிபி குறித்து பிரவீன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு முட்டை பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 1
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 4
* தேங்காய் - 1/2 மூடி
* முந்திரி - 1 கையளவு
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த முட்டை - 3
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/2 மூடி தேங்காயை சேர்த்து, அத்துடன் முந்திரியையும்
சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 டீஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து கிளறி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட முட்டைகளை சேர்த்து
கிளறி, 1 கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
முட்டை பாயா தயார்.



Click it and Unblock the Notifications











