Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Avarakkai Kootu Recipe in Tamil: பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும். சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பொதுவாக பொரியல்தான் சைடிஷாக செய்வார்கள், ஆனால் பொரியல் போலவே சாதத்துக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும் மற்றொரு ஐட்டம் என்றால் அது கூட்டுதான்.

பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் உண்மையில் சில வித்தியாசமான காய்கறிகளை வைத்து கூட்டு செய்யலாம். அப்படி ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான காய்தான் அவரைக்காய். பெரும்பாலான மக்கள் அவரைக்காயை சாம்பரில்தான் போடுவார்கள், சிலர் பொரியல் செய்வார்கள். ஆனால் அவரைக்காயை வைத்து அட்டகாசமான கூட்டும் செய்யலாம்.
உங்களுக்கு சுவையான அவரைக்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவரைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அவரைக்காய் - கால் கிலோ
- பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சர்க்கரை - 1/4 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க:
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- அரிசி மாவு - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- அவரைக்காய் மற்றும் தக்காளியை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை கழுவி வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் மற்றும் அரிசி மாவைச் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய அவரைக்காய் மற்றும் தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பச்சை வாசனை போனதும் கழுவி வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் மற்றும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் குக்கரை திறந்து அடுப்பை நன்றாக கிளறினால் சுவையான அவரைக்காய் கூட்டு ரெடி!
- இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications