Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
Jupiter Mercury Make Kendra Drishti Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றியும், தங்களின் நிலைகளின் மூலமும் மற்றும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்தும் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஏப்ரல் மாத இறுதியில் ஒரு அரிய கிரக சேர்க்கை நிகழவுள்ளது. அதாவது தேவர்களின் குருவான குரு பகவானும், கிரகங்களின் இளவரசனான புதனும் சேர்ந்து கேந்திர திருஷ்டி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். ஜோதிடத்தில் இந்த ராஜயோகமானது மிகவும் செல்வாக்குமிக்கதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் முடிவெடுக்கும் திறன் வலுபெறும், நிதி நிலைமை மேம்படும், புதிதாக ஏதாவது தொங்கக்கூடும் மற்றும் அதில் நல்ல வெற்றியையும் பெறக்கூடும்.
பொதுவாக இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ராஜயோகமானது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் இருக்கும் போது உருவாகும். அந்த வகையில் ஏப்ரல் 27 ஆம் தேதி குரு பகவானும் புதனும் கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான தாக்கத்தை உருவாக்கவுள்ளனர். குறிப்பாக இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது குரு புதனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குரு புதனால் உருவாகும் கேந்திர திருஷ்டி ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சிந்திக்கும் திறனும், புரிதலும் மேம்படும். இதன் மூலம் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
குரு புதனால் உருவாகும் கேந்திர திருஷ்டி ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஐடி மற்றும் ஆன்லைன் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிதாக ஏதாவது ஒன்றை தொடங்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். குரு மற்றும் புதனின் அருளால் மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
குரு புதனால் உருவாகும் கேந்திர திருஷ்டி ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலைமை எதிர்பாராத அளவில் வலுவடையும். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள் மற்றும் சட்ட விஷயங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த தகராறுகள் முடிவுக்கு வரும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


