Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்
Parangikai Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று வித்தியாசமான அதே சமயம் ஆரோக்கியமான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் பரங்கிக்காய் என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசணிக்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.

வழக்கமான சட்னி போல அல்லாமல் இதில் பரங்கிக்காய் சேர்த்து சட்னி அரைக்கப்படுவதால் இந்த சட்னி கொஞ்சம் இனிப்பு மற்றும் கார சுவையுடன் வித்தியாசமான சுவையில் இருக்கும், மேலும் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த சட்னி சிறந்த தேர்வாக இருக்கும். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கி விடுவீர்கள்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பரங்கிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பரங்கிக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ பரங்கிக்காய்
- ¼ கப் துருவிய தேங்காய்
- 3 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
- ½ ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- பரங்கிக்காயை நன்றாக சுத்தம் செய்து, தோலை உரித்து, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் வர மிளகாயை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- அதே வாணலியில்கடாயில் துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய பரங்கிக்காயைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பரங்கிக்காய் நன்றாக வேகும் வரை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
- பரங்கிக்காய் மென்மையாகும் வரை வேக விடவும். பரங்கிக்காயயை கரண்டியால் எளிதாக வெட்டக்கூடிய அளவிற்கு காய் வெந்திருக்க வேண்டும். அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த கலவை நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- இதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புளியைச் சேர்க்கவும்.
- அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பரங்கிக்காயிலிருந்து போதுமான அளவு நீர் வெளியேறியிருந்தால், நீங்கள் தனியாகத் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமிருக்காது.
- இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே மிகவும் குறைவான தண்ணீரை சேர்த்து அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான பரங்கிக்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications