Latest Updates
-
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முழங்கால் கருப்பாக அசிங்கமாக காட்சியளிக்கிறதா? இப்படி முழங்கால் கருப்பாக இருப்பதால், ஷார்ட்ஸ், ஸ்கர்ட் என்று எதுவும் போட முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? முழங்கால்களில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? அதற்காக கடைகளில் விற்கப்படும் பல க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்தியுள்ளீர்களா?
ஆயினும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா? அப்படியானால் இயற்கை வழிகளை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு முழங்கால் பகுதிகளில் பராமரிப்பு கொடுக்கும் போது, அவற்றில் உள்ள பண்புகள் முழங்கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முழுமையாக நீக்கி, சருமத்திற்கு ஒரு நல்ல நிறத்தைக் கொடுக்கும். கீழே முழங்கால் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் இருப்பதோடு, வைட்டமின்-சி-யும் அதிகம் உள்ளன. அதே சமயம் தேன் சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முழங்கால்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் பயன்படுத்தும் போது, முழுங்கால்களில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.
2. பேக்கிங் சோடா ஸ்க்ரப்
பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள இறந்த செல்களை திறம்பட வெளியேற்றி, நல்ல மாற்றத்தைக் காட்டும். அப்படிப்பட்ட பேக்கிங் சோடாவை ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் சிறிது நீரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முழங்கால்களில் தடவி மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தும் போது, சரும நிறம் படிப்படியாக மேம்படும்.
3. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் சருமத்தில் பல மாயங்களை புரியக்கூடியது. குறிப்பாக சருமத்தை வறட்சியடையாமல், ஈரப்பதத்துடனும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு கற்றாழை ஜெல்லை முழங்கால்களில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், முழங்கால்களில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.
4. உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கில் உள்ள நொதிகளும், மைல்டு ப்ளீச்சிங் பண்புகளும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை முழங்கால்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வரும் போது, முழங்கால்களில் இருக்கும் கருமை நீங்கி, முழங்கால்கள் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
5. தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி ஈரப்பதமூட்டும். அதே சமயம் சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றும். அதற்கு தேங்காய் எண்ணெயுடன் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முழங்கால்களில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தும் போது, முழங்கால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முழங்கால்கள் பட்டுப்பான்று மென்மையாகவும், ட்டுப் போன்றும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
போட்டோ மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
