Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடிங்க.. உடல் எடையும் குறையும்.. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்...
Weight Loss Kanji Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? அதே வேளையில் அதிகரித்த உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்படியானால் நார்ச்சத்து அதிகம் நிறைந்த சிறுதானியங்களை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
அதுவும் குதிரைவாலி, சாமை, திணை, வரகரிசி ஆகியவற்றுடன், முருங்கைக்கீரையையும் சேர்த்து கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடல் எடை குறைவதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக இந்த கஞ்சியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் குடிக்கலாம். மேலும் இந்த கஞ்சி சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
கஞ்சிக்கு...
* குதிரைவாலி - 1/4 கப்
* சாமை - 1/4 கப்
* திணை - 1/4 கப்
* வரகரிசி - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 4 கப்
* சின்ன வெங்காயம் - 10 (தட்டியது)
* பூண்டு - 10 பல் (தட்டியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் குதிரைவாலி, 1/4 கப் சாமை,
1/4 கப் திணை, 1/4 கப் வரகரிசி மற்றும் 1/4 கப் பாசிப்பருப்பு
ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை 2 முறை நீரில் கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் நீரை ஊற்றி, அதில்
ஊற வைத்த சிறுதானியங்களை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து, நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் தட்டி வைத்துள்ள 10 சின்ன வெங்காயம், 10 பூண்டு
மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கஞ்சிக்கு தேவையான அளவு
சுடுநீரை ஊற்றி, அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி, 10
நிமிடம் மிதமான தீயில் வைத்து முருங்கைக்கீரையை வேக வைத்து
இறக்கினால், சுவையான மற்றும் சத்தான சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications











