Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ரத்னா கபே பேமஸ் சாம்பார் ரெசிபி...இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க..எல்லோரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!
Ratna Cafe Style Sambar Recipe in Tamil: தமிழர்களையும் சாம்பாரையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. டிபனாக இருந்தாலும் சரி, சாதமாக இருந்தாலும் சரி அதற்கு சிறந்த காம்பினேஷன் என்றால் அது சாம்பார்தான். தமிழ்நாட்டில் பல பிரபலமான உணவகங்கள் உள்ளன, அவற்றில் பரிமாறப்படும் சாம்பார் தமிழகம் முழுவதும் பிரபலமானதாக இருக்கும். அப்படி சென்னை முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு சாம்பார்தான் ரத்னா கஃபே ஹோட்டல் சாம்பார்.
ரத்னா கஃபே ஹோட்டல் டிபன் சாம்பார் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். இந்த சாம்பார் இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரத்னா கஃபே சாம்பார் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? இந்த சாம்பாருக்கு ஒரு ஸ்பெஷல் மசாலாவை அரைக்க வேண்டும். இந்த மசாலாவும், முருங்கைக்காயும் இருந்தால் போதும் வீடே மணக்கும் சாம்பாரை செய்யலாம். இந்த வகை சாம்பார் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ரத்னா கஃபே ஹோட்டல் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரத்னா கஃபே ஹோட்டல் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- 1 டீஸ்பூன் நெய்
- 4 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1/2 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 தக்காளி, நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், நறுக்கியது
- 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் வெல்லம்
- 1 டீஸ்பூன் உப்பு
- 1/4 கப் தண்ணீர்
வேக வைக்க:
- 1/4 கப் துவரம்பருப்பு
- 1/4 கப் பாசிப்பருப்பு
- 2 கப் தண்ணீர்
காய்கறிகள்:
- முருங்கைக்காய் - 2
- கேரட் - 2
- பீன்ஸ் - 5
பிற பொருட்கள்:
- 3 தக்காளி, நறுக்கியது
- 1/2 கப் தண்ணீர்
- 2 கொத்து கறிவேப்பிலை
தாளிக்க:
- 1 டீஸ்பூன் நெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
செய்முறை:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய்யை சேர்க்கவும். அதில் வர மிளகாய், தனியா, வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
- உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும் வரை இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் துருவிய தேங்காயைச் சேர்த்து, தேங்காய் பொன்னிறமாகவும் மாறும் வரை வதக்கவும். அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெல்லம், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் நன்றாக கழுவி சுத்தம் செய்த துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்க்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் வரும் வரை சமைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் இயற்கையாகவே வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். அதில் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் கறிவேப்பிலை சேர்க்கவும் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும்.
- பின்னர் வேக வைத்த பருப்பு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் முழுமையாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- சாம்பாரை தாளிக்க ஒரு சிறிய கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் கடுகு மற்றும் சீரகத்தை சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும் அதை சாம்பாரில் கொட்டி நன்கு கிளறினால் சூப்பரான ரத்னா கஃபே சாம்பார் ரெடி!



Click it and Unblock the Notifications