இனிப்பான தினை குழிப்பணியாரம்

Posted By:
Subscribe to Boldsky

டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. இந்த தினையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். ஆனால் இங்கு தினையைக் கொண்டு பணியாரம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தினை குழிப்பணியாரமானது இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த தினை குழிப்பணியாரத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Sweet Thinai Kuzhi Paniyaram

தேவையான பொருட்கள்:

தினை - 1/2 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
நாட்டுச்சர்ச்சரை - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் தினையை நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியான பாகு தயார் செய்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தினையை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள தினை பேஸ்ட்டை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கிளறி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நல்லெண்ணெயை தடவி, பணியார மாவை ஊற்றி, மூடி வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், இனிப்பான தினை பணியாரம் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Sweet Thinai Kuzhi Paniyaram

Do you know how to prepare Sweet Thinai Kuzhi Paniyaram? Here is the recipe. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter