Just In
- 3 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 5 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 5 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- News
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்
- Automobiles
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு
மழைக்காலத்தில் அனைவருக்குமே நல்ல காரசாரமாக சமைத்து சாப்பிட தோன்றும். அதிலும் பலருக்கு அசைவ உணவை தான் சாப்பிட பிடிக்கும். உங்களுக்கு இந்த மழைக்காலத்தில் ஒரு அட்டகாசமான அதே சமயம் நாகர்கோவில் ஸ்பெஷல் சிக்கன் ரெசிபியை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியால் அங்கு ஸ்பெஷலாக செய்யப்படும் சிக்கன் குழம்பு ரெசிபியை செய்து சுவையுங்கள். கீழே நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிபி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த குழம்பானது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கும் அற்புதமாக இருக்கும். வாருங்கள் இப்போது நாகர்கோவில் சிக்கன் குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம்.
MOST READ: ருசியான... சிக்கன் கெட்டி குழம்பு
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* எண்ணெய் - 1/4 கப்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 4
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேட் - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா பவுடர் - 3-4 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை:
* முதலில் மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
* பின் அதில் சிக்கன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
* அடுத்து, அதில் சிக்கனைப் போட்டு மசாலா சிக்கனுடன் ஒன்றுசேரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து குறைவான தீயில் 30-35 நிமிடம் வேக வைக்கவும்.
* பிறகு அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
* எண்ணெயானது நன்கு பிரிந்து மேலே மிதக்கும் போது, குழம்பின் மேல் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்.