Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Vendhaya Keerai Paruppu Kootu Recipe In Tamil: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி வெயில் காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க அடிக்கடி கீரையை உணவில் சேர்ப்பது நல்லது. அதுவும் வெந்தயக் கீரையை வாங்கி வட இந்திய ஸ்டைலில் பருப்பு கூட்டு செய்தால், சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த கூட்டு ரெசிபி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

இந்த வெந்தயக்கீரை பருப்பு கூட்டு ரெசிபி குறித்து ஹேமா சுப்ரமணியன் என்பது தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த வட இந்தியன் ஸ்டைல் வெந்தயக் கீரை பருப்பு கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
கூட்டு செய்வதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வெந்தயக் கீரை - 1 கட்டு
* தண்ணீர் - சிறிது
* வேக வைத்த பருப்பு
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சிவப்பு மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு,
பாசிப்பருப்பு ஆகியவற்றை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, 30 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீரை
ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
சீரகம், பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை
மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள் சேர்த்து குறைவான
தீயில் வைத்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து, சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் வேக வைத்து மசித்து
வைத்துள்ள பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து 10
நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், சிவப்பு மிளகாய்,
மிளகாய் தூள் மற்றும் சிறிது கொத்தமல்லி இலையை சேர்த்து தாளித்து,
பருப்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை பருப்பு
கூட்டு தயார்!



Click it and Unblock the Notifications
