Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Chettinad Muttai Puli Kulambu Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதேமாதிரி சூப்பரான ஒரு குழம்பை செய்ய ஆசைப்படுறீங்களா? வழக்கமான சாம்பார், ரசம் மாதிரி இல்லாம புதுசா ஏதாவது செஞ்சு சாப்பிட விரும்புறீங்களா? அப்ப முட்டையை வைச்சு இந்த குழம்பை முயற்சி செஞ்சு பாருங்க. இந்த முட்டைக் குழம்பு நீங்க வழக்கமா செய்யுற குழம்பு மாதிரி இல்லாம செட்டிநாடு ஸ்டைலில் முட்டை புளிக்குழம்பா செய்யுங்க.
பொதுவாக புளிக்குழம்புனா கத்திரிக்காய், வெண்டைக்காய், வாழைக்காய் போன்றவற்றை வைத்துதான் செய்வோம். ஆனால் முட்டையை வைத்து புளிக்குழம்பை நீங்கள் செய்திருக்கவே மாட்டிர்கள். இந்த முட்டை புளிக்குழம்பு சாதத்தோட மட்டுமின்றி தோசை, சப்பாத்திக்கும் சூப்பரா இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் முட்டை புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் முட்டை புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் தட்டிய பூண்டு
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள்
- 2 தக்காளி
- தேவையான அளவு உப்பு
- 1 சிறிய துண்டு புளி (நெல்லிக்காய் அளவு)
- 1 கப் சுடுதண்ணீர்
- 1/3 கப் துருவிய தேங்காய்
- தேவையான அளவு தண்ணீர்
- 4 வேகவைத்த முட்டைகள்
- 2 கொத்து கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- புளியை ஒரு கோப்பை சுடுநீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதைப் பிழிந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
- துருவிய தேங்காயை ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துத் தனியாக வைக்கவும்.
- ஒரு வாணலியில் கடலை எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகவும் லேசான பழுப்பு நிறமாகவும் மாறும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். மசாலாப் பொருட்களை எண்ணெயில் நன்றாக வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தக்காளி நன்கு குழைந்து மென்மையாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் புளிக் கரைசலைச் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து, குழம்பை ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- அரைத்த தேங்காய் விழுது மற்றும் வேகவைத்த முட்டைகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, பாத்திரத்தை மூடி வைத்து, மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- இறுதியாக, தாராளமாக மல்லித் இலைகளைத் தூவி அலங்கரித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
