சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Ketu In Leo 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கேதுவிற்கு மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மேலும் கிரகங்களிலேயே கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். அதுமட்டுமின்றி, சனி பகவானுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர் கேது. அதுவும் சுமார் 18 மாதங்கள் வரை ஒரு ராசியில் இருப்பார்.

Ketu In Leo 2026 Next 90 Days Will Be Lucky For These 3 Zodiac Signs

தற்போது கேது சிம்ம ராசியிலும், மகம் நட்சத்திரத்திலும் உள்ளார். ஜோதிட ரீதியாக, கேதுவின் இந்நிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாகவும், பலவிதமான நன்மைகளைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது. கேது ஒருவருக்கு சாதகமான நிலையில் இருந்தால், அந்நபர் திடீர் நிதி ஆதாயங்கள், தடைபட்ட வேலைகளில் வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூடும்.

இந்த சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார். எனவே அடுத்து வரும் 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் எந்த ராசிக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

கேதுவின் நிலையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சிம்மம்

கேதுவால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாத காலம் அதிஷ்டமானதாக இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால் நல்ல உயரத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு கேதுவால் அடுத்த 3 மாத காலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் நண்பரை/உறவினரைச் சந்திப்பது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். மொத்தத்தில் அடுத்த 3 மாத காலம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 7, 2026, 23:30 [IST]
Desktop Bottom Promotion