அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..

Jupiter Transit In Leo In October 2026: வேத ஜோதிடத்தின் படி தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் வளர்ச்சி, முன்னேற்றம், அறிவு, அதிர்ஷ்டம், செல்வம், கல்வி, குழந்தைகள் மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணியாவார். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். நவகிரகங்களில் சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர் குரு பகவான்.

Jupiter Transit In Leo In October 2026 These Zodiac Signs Will See Career Growth

இந்த குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் தனது பயணத்தை இடைநிறுத்தி, சிம்ம ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த சிம்ம ராசிக்குள் நுழையும் குரு பகவான் அந்த ராசியில் ஜனவரி 25, 2027 வரை இருப்பார். அதன் பின் வக்ர நிலையில் கடக ராசியை அடைவார்.

குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் குரு பகவானின் அருளால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். முக்கியமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குறிப்பாக ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடகம்

குரு பெயர்ச்சியின் போது கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும் மற்றும் இந்த நட்பால் நல்ல ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

துலாம்

குரு பெயர்ச்சியின் போது துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளைப் பெறுவார்கள். குறிப்பாக வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தொழில் மற்றும் நிதி ரீதியாக அற்புதமாக இருக்கும்.

சிம்மம்

குரு பெயர்ச்சியின் போது சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். குருவின் அருளால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை அல்லது தொழிலில் புதிய பொறுப்புகள் அல்லது வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். நிதி ரீதியாக அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். குரு பகவானின் ஆசியால் பண பிரச்சனைகள் குறைந்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion