ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Hotel Style Pudalangai Kootu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் புடலங்காய் என்றாலே தொடமாட்டார்களா? நீங்கள் புடலங்காயை எப்போதும் பொரியல் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கூட்டு செய்யுங்கள். அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் கூட்டு செய்யுங்கள். இப்படி கூட்டு செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Hotel Style Pudalangai Kootu How To Make Pudalangai Kootu Recipe

முக்கியமாக ஒருமுறை இந்த பக்குவத்தில் கூட்டு செய்தால், பின் அடிக்கடி இந்த சுவையில் தான் புடலங்காயை செய்து சாப்பிடுவீர்கள். அதுவும் இந்த கூட்டு சாதத்திற்கு பொருத்தமான சைடு டிஷ்ஷாக இருப்பது மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/4 கப்
* வரமிளகாய் - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

வேக வைப்பதற்கு...

* பாசிப்பருப்பு - 1/2 கப்
* கடலைப்பருப்பு - 1/4 கப்
* புடலங்காய் - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, சுத்தமான நீரை ஊற்றி, 10 நிடடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நீருடன் சேர்த்து, அத்துடன் நறுக்கிய புடலங்காய், மஞ்சள் தூள், பூண்டு பற்கள், பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அதோடு பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து கலந்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, 3/4 கப் நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 8, 2026, 12:34 [IST]
Desktop Bottom Promotion