Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
Heart Line On Palm Meaning In Tamil: உங்கள் உள்ளங்கையைக் கொண்டே உங்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கூற முடியும் என்பது தெரியுமா? பாரம்பரிய கைரேகை சாஸ்திரத்தில், உள்ளங்களில் உள்ள ரேகைகளிலேயே இதய ரேகை மிகவும் முக்கியமான ரேகையாகும். இது உள்ளங்கையின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ரேகை தான் ஒருவரது உணர்ச்சி, உறவு, காதல் போன்றவற்றுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

நீங்கள் உங்களின் காதல் வாழ்க்கை மற்றும் உறவுகளில் நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை உங்கள் இதய ரேகையைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். ஆயினும், கைரேகை சாஸ்திரம் என்பது ஒரு பாரம்பரிய குறி சொல்லும் முறையே தவிர, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு முறை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கீழே 4 விதமான இதய ரேகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உங்கள் கைகளில் இதய ரேகை எப்படி உள்ளது என்பதை பார்த்து, உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
டைப் #1
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உங்கள் இதய ரேகையானது நடுவிரலை நோக்கி மேலே சென்றால், நீங்கள் மிகச்சிறந்த காதலர் என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது. மேலும் நீங்கள், காதலில் மிகவும் தீவிரமாக இருப்பீர்கள். துணையின் மீது அலாதியான பிரியத்தைக் கொண்டிருப்பதோடு, அதை அவர்கள் உணர வைக்க மிகுந்த முயற்சியை எடுப்பீர்கள். அதோடு நீங்கள் பாசமுள்ளவர்களாகவும், உணர்வுபூர்வமாக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்.
டைப் #2
படத்தில் காட்டப்பட்டவாறு உங்கள் இதய ரேகை ஆள்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் மேலே நோக்கி சென்றால், நீங்கள் மிகவும் ரொமான்டிக்கான காதலர் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் நீங்கள் உறவை சிறப்பாக்கும் சிறுசிறு விஷயங்களான அக்கறையான மெசேஜ் அனுப்புவது, திடீரென்று சந்திக்க செல்வது, துணையின் சிறுசிறு விஷயங்களையும் நினைவில் கொண்டு அதை கொண்டாடுவது போன்றவற்றை செய்வீர்கள். நீங்கள் காதலில் ஆடம்பரமாக எதையும் எதிர்பார்க்கமாட்டீர்கள். உங்களைப் பொறுத்தவரை, அன்றாடத் தருணங்களிலேயே காதலைக் காண்பீர்கள். மொத்தத்தில் நீங்கள் உங்கள் உறவில் அரவணைப்பு, பாசம் மற்றும் உண்மையான புரிதல் இருக்க வேண்டும் என விரும்புவீர்கள்.
டைப் #3
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உங்கள் இதய ரேகை ஆள்காட்டி விரலை நோக்கி மேலே சென்றால், நீங்களும் உங்கள் துணையும் ஒரு சிறந்த, கவர்ச்சிகரமான ஜோடியாக இருப்பீர்கள் என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதாவது நீங்களும் உங்கள் துணையும் பொறுமை, அக்கறை, அன்பு நிறைந்த ஒரு அற்புதமான உறவைக் கொண்டிருப்பீர்கள். வலுவான காதல் பிணைப்பை கொண்டிருப்பதோடு, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் தம்பதியாக இருப்பீர்கள். ஒரு உறவு சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்க ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தாலே போதும். அப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு மற்றும் அன்யோன்யம் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இருக்கும்.
டைப் #4
படத்தில் காட்டப்பட்டவாறு உங்கள் இதய ரேகை கீழ்நோக்கி வளைந்திருந்தால், நீங்களும் உங்கள் துணையும் நல்ல ஜோடியாக இருப்பீர்கள் என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதாவது காதல் வாழ்க்கையில் நீங்கள் திருப்தியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
