Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
Numerology: வெற்றி ஒருவருக்கு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. என்ன தான் சிலருக்கு வெற்றி முயற்சிக்காமலேயே கிடைத்துவிட்டாலும், இன்னும் சிலர் எவ்வளவு தான் கடினமாக முயற்சித்தாலும், தோல்வியையே பெறுவார்கள். ஆனால் தோல்வியடைந்துவிட்டால் அதற்காக மனம் தளரக்கூடாது. ஏனெனில் சிலருக்கு வெற்றியானது குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பின்னரே கிடைக்கும். இதற்கு அவர்களின் பிறந்த தேதி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் 35 வயதிற்கு மேல் தான் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது வெற்றி பெற்றாலும் வெற்றி என்பது வெற்றி தான். இப்போது நியூமராலஜி படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் தனது 35 வயதிற்கு பின் வெற்றியைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் திறமை, சுய வெளிப்பாடு ஆகியவற்றை அதிகம் நம்புபவர்கள். இதனால் இவர்களுக்கு உடனடி வெற்றி எதுவும் கிடைக்காது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் 35 வயதை எட்டிய பின்னர் தான் வெற்றி கனியை ருசிப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் அனுபவத்தைப் பெற்ற பின்னரே வெற்றியை அடைவார்கள். அதே சமயம் இந்த வெற்றி நீண்ட காலம் நீடித்திருக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒருவித மன குழப்பத்துடன் இருப்பார்கள் மற்றும் இருப்பியல் சார்ந்த சோர்வையும் எதிர்கொள்வார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவால் ஆளப்படுகிறார்கள் மற்றும் இவர்களுக்கு ஆராய்ச்சி, ஆன்மீகம் மற்றும் சுய பரிசோதனை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். மேலும் இவர்களின் தனித்துவமான பகுப்பாய்வுத் திறன்கள் மற்றும் எதையும் கற்பனைக்கு அப்பால் யோசிக்கும் திறன்களால், 35 வயதிற்கு மேல் பெரும் வெற்றியைப் பெறுவார்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. எண் கணிதத்தின் படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் 35 வயதிற்கு மேல் தான் வாழ்வில் பெரும் வெற்றியைக் காண்பார்கள். சனி பகவானால் ஆளப்படும் இவர்கள், ஆரம்பத்தில் வாழ்வில் பல போராட்டங்களை சந்திப்பதோடு, அதை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதன் மூலம் ஞானத்தை பெற்றிருப்பார்கள். எனவே நீங்கள் 20-களில் நிறைய சிரமங்களை சந்தித்தால், நம்பிக்கையை சற்றும் இழக்காமல், உறுதியோடு இருந்து, கடின உழைப்பை கைவிடாமல், ஒழுக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், நிச்சயம் 35-களில் பெரும் வெற்றியைக் காண்பீர்கள்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முழுமை, மனிதநேயம் மற்றும் ஞானத்தின் அடையாளமாக திகழ்பவர்கள். எனவே இத்தகையவர்கள் தங்கள் வாழ்வில் பெரிய அளவில் வெற்றியைக் காண சற்று தாமதமாகலாம். அதுவும் 35 வயதிற்கு மேல் இவர்களின் வெற்றிகளானது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடியதாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


