Latest Updates
-
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
நியூமராலஜி படி, இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: ஜோதிடத்தின் ஒரு கிளையான நியூமராலஜியின் மூலம் ஒருவரது எதிர்காலம், ஆளுமை, வாழ்க்கை மற்றும் சில சிறப்பான தகவல்களைப் பெறலாம். இந்த நியூமராலஜியில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. ஒவ்வொரு எண்ணும் ஒரு சிறப்பு ஆற்றலையும் தரத்தையும் கொண்டிருப்பதாகக் நம்பப்படுகிறது.
பொதுவாக ஒருவரது விதி எண் அந்நபரின் பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது. அதாவது ஒருவர் ஒரு மாதத்தின் 25 ஆம் தேதியில் பிறந்தால், அந்நபரின் விதி எண் 2+5 = 7 ஆகும். எண் கணிதத்தில் உள்ள ஒவ்வொரு எண்ணும் அதிபதிகளைக் கொண்டுள்ளன. இந்த அதிபதிகளைப் பொறுத்து, அந்த எண்ணிற்கு உரியவர்களின் குணங்கள் மற்றும் நடத்தை இருக்கும்.

அனைவருமே பணத்தை சம்பாதிப்பதற்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி உழைக்கும் அனைவரின் கையிலும் பணம் குவிவது இல்லை. அதே வேளையில் சிலர் அதிகம் சிரமப்படாமலேயே நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அந்த வகையில் எண் கணிதத்தில் குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், போராடி வெற்றி பெறுவதிலும் முன்னணியில் உள்ளனர். இப்போது அவர்கள் யார் என்பதைக் காண்போம்.
விதி எண் 5
ஒரு மாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. எண் கணிதத்தின் படி, இந்த எண்ணின் அதிபதி புதன் ஆவார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் அருளை பிறவியிலேயே பெற்றிருப்பார்கள். இப்போது விதி எண் 5-ஐ கொண்டவர்களின் சிறப்பான குணங்கள் என்னவென்பதைக் காண்போம்.
ரிஸ்க் எடுக்க பயப்படமாட்டார்கள்
விதி எண் 5-ஐ கொண்டவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க சற்றும் தயங்கமாட்டார்கள். மேலும் இவர்கள் ஒரு முடிவை எடுக்க நீண்ட நேரம் எடுக்கமாட்டார்கள். அப்படியே வேகமாக முடிவெடுத்தாலும், அந்த முடிவு சிறப்பானதாக இருக்கும். மிகவும் தைரியமானவர்கள். இவர்களின் தைரியம் தான் இவர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளது.
புத்திசாலித்தனம்
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மனம் மிகவும் கூர்மையானது. இவர்கள் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செய்வார்கள். இதனால் இவர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். இதனால் இவர்களுக்கு பணப்பற்றாக்குறை என்பது இருக்காது. வேலையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை முழு கடின உழைப்புடனும், அர்ப்பணிப்புடனும் செய்வார்கள்.
பயண விரும்பிகள்
ஒரு மாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே பயண விரும்பிகளாக இருப்பர். இவர்களால் ஒரு இடத்தில் நீண்ட நேரம் வேலை எதுவும் செல்லாமல் இருக்க முடியாது. மேலும் இவர்கள் மற்றவர்களுடன் எளிதில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இவர்களின் மிகச்சிறந்த குணம் பேச்சுத்திறன் தான். இவர்கள் பேசியே எப்பேற்பட்ட கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பார்கள். இந்த பேச்சுத்திறன் தான் இவர்களை செல்லும் இடங்களில் பிரபலமாக்கி, நிதி நிலையை வலுவாக்குகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications