உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கத்தை சொல்றோம்...

Numerology: நாம் ஒவ்வொருவரும் நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனால் அனைவருக்குமே தங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை.

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், வளர்ச்சியை காணாமல் தேங்கிய நீர் போன்று தான் பலரது நிலை உள்ளது. இப்படி ஒருவரது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்களது ஒருசில பழக்கங்கள் கூட காரணமாக இருக்கலாம் என்பது தெரியுமா? அதுவும் அந்த பழக்கங்களால் தன்னை அறியாமலேயே அவர்கள் செய்வதாகும்.

Numerology Your Date Of Birth Reveals The Habits Silently Blocking Your Growth

ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் வளர்ச்சிக்கு அமைதியாக தடையை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னவென்பதை அறியலாம். இதுக்குறித்து ஜோதிடர் நிகிதா வெர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த தேதிப்படி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கவழக்கங்களை பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிறந்த தேதி: 1, 10, 19, 28

* முடிவுகளுக்கு மற்றவர்களை சார்ந்திருப்பதை நிறுத்துங்கள். இது உங்களின் தலைமைத்துவ சக்தியைத் தடுக்கும்.
* ஞாயிற்றுக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள். இது உங்களின் சூரிய ஆற்றலைக் குறைக்கும்.
* ஆதிக்கம் செலுத்தும் நபரின் கீழ் பணிபுரிவதை நிறுத்துங்கள். இது உங்களின் நம்பிக்கையை மெதுவாக நசுக்கும்.
* பணியிடத்தில் பொருட்களை சிதறிய நிலையில் வைத்திருப்பதை நிறுத்துங்கள். இது புதிய தொடக்கங்களையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் தாமதப்படுத்தும்.

பிறந்த தேதி: 2, 11, 20, 29

* ஆக்ரோஷமான நபர்களுடன் பழகுவதை நிறுத்துங்கள். இது உங்களின் உள்ளுணர்வை பாதிக்கும்.
* உணவையும், தண்ணீரையும் தவிர்ப்பதை நிறுத்துங்கள். இது உங்களின் சந்திர சக்தியை பலவீனப்படுத்தும்.
* அடர் சிவப்பு அல்லது மெரூன் நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள். இது உங்களின் உணர்ச்சியை சீர்குலைக்கும்.
* தூங்க செல்லும் முன் எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றுங்கள்.

பிறந்த தேதி: 3, 12, 21, 30

* எதிர்மறையான பேச்சு மற்றும் சுய விமர்சனத்தை நிறுத்துங்கள். இது உங்களின் வெளிப்பட்டைத் தடுக்கும்.
* வதந்திகள் அல்லது அதிகமாக வாக்குறுதிகளை கொடுப்பதை நிறுத்துங்கள். இது குரு பகவானால் கிடைக்கும் அதிர்ஷ்டத்தைத் தடுக்கும்.
* வியாழக்கிழமைகளில் கருப்பு அல்லது சாம்பல் நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள்.
* பயன்படுத்தாத நோட்டுகள் அல்லது பேனாக்களை வைத்திருப்பதை நிறுத்துங்கள். இது உங்களின் ஆற்றலை தேங்கச் செய்து படைப்பாற்றலைத் தடுக்கும்.

பிறந்த தேதி: 4, 13, 22, 31

* தொடர்ந்து குறை கூறுவதையும், தோல்வி பயத்தையும் நிறுத்துங்கள். இது உங்களின் பண வரவைத் தடுக்கும்.
* பணியிடத்தை அசுத்தமாக வைத்திருப்பதை நிறுத்துங்கள். இது சனியால் கிடைக்கும் நற்பலனைத் தடுக்கும்.
* நகைகளில் உலோகங்களைக் கலந்து அணிவதை நிறுத்துங்கள். ஒரே வகையான நகையை அணியுங்கள்.
* ஒழுக்கத்தைத் தவிர்ப்பதை நிறுத்துங்கள். ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் அதிர்ஷ்டத்தைத் தடுக்கும்.

பிறந்த தேதி: 5, 14, 23

* ஒரே வழக்கத்தை நீண்ட காலம் பின்பற்றுவதை நிறுத்துங்கள். ஏனெனில் வளர்ச்சிக்கு மாற்றம் அவசியம்.
* புகைப்பிடிப்பது, அதிக காப்ஃபைன் குடிப்பது மற்றும் குழப்பமான அட்டவணைகளை போடுவதை நிறுத்துங்கள். இது புதனை பலவீனப்படுத்தும்.
* அடர் ப்ரௌன் நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள்.
* அளவுக்கு அதிகமாக யோசிப்பதையும், பல வேலைகளை ஒரே நேரத்தை செய்வதையும் நிறுத்துங்கள். இது அதிர்ஷ்டத்தை தடுக்கும்.

பிறந்த தேதி: 6, 15, 24

* அனைவரையும் திருப்திப்படுத்துவதை நிறுத்துங்கள். இது உங்கள் சுக்கிரனின் ஈர்ப்பு சக்தியை பாதிக்கும்.
* உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்களை வீட்டில் வைத்திருப்பதை நிறுத்துங்கள்.
* வெள்ளிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள். இது வசீகரத்தையும், செழிப்பையும் மங்கச்செய்யும்.
* நச்சுத்தன்மை வாய்ந்த உறவுகளில் நீடிப்பதை நிறுத்துங்கள்.

பிறந்த தேதி: 7, 16, 25

* எதையும் அளவுக்கு அதிகமாக ஆராய்வதை நிறுத்துங்கள். இது உங்களின் உள்ளுணர்வை பலவீனப்படுத்தும்.
* கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை நிறுத்துங்கள். இது உங்களின் நல்ல அதிர்வை குறைக்கும்.
* சிவப்பு நிற ஆடைகளை அதிகம் அணிவதை நிறுத்துங்கள். இது உங்களின் மன அமைதியை பாதிக்கும்.
* வீட்டில் நீரை தேக்கி வைத்திருப்பதை நிறுத்துங்கள்.

பிறந்த தேதி: 8, 17, 26

* அடிக்கடி கடன் வாங்குவதை நிறுத்துங்க.ள இது உங்களின் செல்வத்தை தடுக்கும்.
* பண விஷயத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். இது இழப்பையே ஏற்படுத்தும்.
* சனிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள். இது சனியின் ஆற்றலை பலவீனப்படுத்தும்.
* மூத்தவர்களை அவமதிப்பு செய்வதை நிறுத்துங்கள்.

பிறந்த தேதி 9, 18, 27

* மனக்கசப்புகளை வைத்திருப்பதை நிறுத்துங்கள். இது ஆன்மீக வளர்ச்சியை தடுக்கும்.
* கருப்பு நிறம் அல்லது சாம்பல் நிற ஆடைகளை அணிவதை நிறுத்துங்கள். இது செவ்வாயின் சக்தியை குறைக்கும்.
* நன்றி கெட்டவர்களுக்கு உதவுவதை நிறுத்துங்கள். இது உங்களின் சந்தோஷத்தை பாதிக்கும்.
* படுக்கைக்கு அடியில் உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்களை வைத்திருப்பதை நிறுத்துங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, January 25, 2026, 11:59 [IST]
Desktop Bottom Promotion