Latest Updates
-
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம்
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்..
Summer Special Vazhaithandu Mor Kootu Recipe In Tamil: கோடைக்காலம் வந்துவிட்டாலே ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் ஒவ்வொரு நாள் சமையலையும் முடிவு செய்வது என்பது பெரிய வேலையாக இருக்கும். இதுவும் மதிய வேளையில் தான் முடிவெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் காரமாக சாப்பிட பிடிக்காது. சொல்லப்போனால் அடிக்கிற வெயிலுக்கு சாப்பிடவே தோன்றாது. அப்படியே சாப்பிட தோன்றினாலும் காரசாரமாக இல்லாமல் சாப்பிட நினைப்போம்.

அதுவும் வீட்டில் தயிர் இருந்தால், அதுவே போதும் என்று நினைப்போம். ஆனால் எத்தனை நாள் வெறும் தயிரை சாப்பிட முடியும். இந்நிலையில் கோடையில் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அதுவும் வாழைத்தண்டை வெறுமனே பொரியல் மட்டும் செய்து சாப்பிடாமல், அத்துடன் மோர் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். அதோடு இது உடல் சூட்டையும் குறைக்கும்.
இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபி குறித்து கவிதா சமையலறை என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் மசாலா அரைப்பதற்கு..
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* சின்ன வெங்காயம் - 4-5 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* வாழைத்தண்டு - 250 கிராம் (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த தேங்காய் மசாலா
* மோர் - 1 கப்
செய்முறை:
* முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, நீரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம்
ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் 4 வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள
வாழைத்தண்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து
2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி இறக்கி 5 நிமிடம் குளிர
வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கப் மோரை சேர்த்து கிளறினால், சுவையான வாழைத்தண்டு
மோர் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











