Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
Summer Special Simla Style Thayir Kuzhlambu Recipe In Tamil: கொளுத்துற வெயிலுக்கு காரசாரமாக சாப்பிடவே பிடிக்காது. சொல்லப்போனால் காரம் அதிகம் இல்லாத, அதே சமயம் சப்பென்று இருக்கும் உணவுகளையே சாப்பிட பிடிக்கும். அதுவும் தயிர் கொண்டு தயாரிக்கும் மோர் குழம்பு, தயிர் குழம்பு போன்ற ரெசிபிக்கள் என்றால் சாப்பிடவும் இதமாக இருக்கும், சமைக்கவும் ஈஸியாக இருக்கும். இதுவரை எத்தனையோ மோர் குழம்பு ரெசிபிக்களைப் பார்த்திருப்போம். இன்று நாம் சிம்லா ஸ்டைல் தயிர் குழம்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த தயிர் குழம்பிற்கு பெரிய வெங்காயம், குடைமிளகாய், கெட்டி தயிர் இருந்தாலே போதும், 5 நிமிடத்தில் சட்டென்று சாதத்துக்கு சைடு டிஷ்ஷை செய்து முடித்துவிடலாம்.

இந்த சிம்லா ஸ்டைல் தயிர் குழம்பு ரெசிபி குறித்து ஸ்பைசி சமையல்ஸ் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சிம்லா ஸ்டைல் தயிர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிம்லா ஸ்டைல் தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* கெட்டி தயிர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய குடைமிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு
மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பிரட்டி வைத்துள்ள குடைமிளகாய் கலவையை சேர்த்து 2
நிமிடம் கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதை இறக்கி 1 கப் கெட்டி தயிரை
ஊற்றி நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சிம்லா
ஸ்டைல் தயிர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications