Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உடல் சூட்டைக் குறைக்கும் கோவைக்காய் தயிர் குழம்பு - வெறும் 10 நிமிஷத்துல எப்படி செய்றது-ன்னு பாருங்க...
Kovakkai Thayir Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு தயிர் குழம்பு செய்யுங்கள். இந்த கோவைக்காய் தயிர் குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
முக்கியமாக இந்த தயிர் குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். இதுவரை கோவைக்காயைக் கொண்டு வெறும் பொரியல், கூட்டு தான் செய்திருந்தால், அடுத்தமுறை கோவைக்காய் கொண்டு தயிர் குழம்பு செய்யுங்கள். இப்படி செய்யும் போது கோவைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கோவைக்காய் தயிர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 2 பல்
* பச்சைமிளகாய் - 2
* இஞ்சி - 1 துண்டு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* சீரகம் - 1 டீஸ்பூன்
குழம்பிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கோவைக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
இஞ்சி, கொத்தமல்லி மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொரிய
விட வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கோவைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் வதக்கி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* கோவைக்காய் வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, அதில் தயிரை
சேர்த்து கிளறினால், சுவையான கோவைக்காய் தயிர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications