Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது...
May 2026 Planet Transits In Tamil: 2026 ஆம் ஆண்டின் மே மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் 4 முக்கிய கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றவுள்ளன. அதுவும் மே மாதத்தின் தொடக்கத்தில் புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதோடு, மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் மே 26 ஆம் தேதி புதன் உதயமாகி, மே 29 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.

அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி செவ்வாய் சொந்த ராசிக்குள் நுழைகிறார். இதனால் இப்பெயர்ச்சியால் செவ்வாய் சனியின் சேர்க்கை முடிவுக்கு வருகிறது. அதன் பின் மே 14 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதேப் போல் மே 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படியான கிரக மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்தாலும், சிலர் எதிர்பாராத அளவில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது மே மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மே மாத கிரக பெயர்ச்சிகளால் மேஷ ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் உங்களின் நிலை வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முக்கியமாக அரசு வேலை செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
மே மாத கிரக பெயர்ச்சிகளால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். இம்மாதத்தில் செவ்வாயின் செல்வாக்கும், சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையும் வருமானத்தில் உயர்வை ஏற்படுத்தும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடனான உறவு மேம்படும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
விருச்சிகம்
மே மாத கிரக பெயர்ச்சிகளால் விருச்சிக ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும் நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களிடையேயான உறவு வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும். மன அழுத்தம் குறையும். இம்மாதமானது உணர்ச்சி ரீதியான ஸ்திரத்தன்மையையும் கொண்டு வரும்.
மகரம்
மே மாத கிரக பெயர்ச்சிகளால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இம்மாதமானது வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



