Latest Updates
-
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்..
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
May Month Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான மற்றும் சுப யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் மே மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் மே மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மே மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 மே மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! மே மாதத்தைப் பொறுத்தவரை, தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய் தனது சொந்த ராசிக்கு செல்வதால், மாத தொடக்கம் ஆற்றலும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும். மனதில் இருந்த பயம் நீங்கும். புது தெளிவு பிறக்கும். புதிதாக ஏதாவது செய்ய ஆவல் எழும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். இருப்பினும் கோபத்தை சற்று கட்டுப்படுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! மே மாதம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களின் கடமைகளை சிறப்பாக செய்வீர்கள். இருந்தாலும், அவ்வப்போது ஒருவித குழப்பம் எழும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மே மாத தொடக்கத்தில் புதன் அஸ்தமனமாகி பலவீனமாகி மன குழப்பத்தை ஏற்படுத்தினாலும், குரு பகவானும், சுக்கிரனும் இம்மாதத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து செயல்படுவார்கள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடல் சோர்வால் சிரமப்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மே மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். நீண்ட கால பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நிதி நிலைமை வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, வேலையில் வெற்றியையும் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும், செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். வீட்டிற்காக சில செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மே மாதத்தில் புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறலாம். வேலையில் மெதுவாக முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் குரு மற்றும் சுக்கிரனின் சுப நிலைகளால் சாதகமான பலன்களையும் பெறக்கூடும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் உடைக்கும். முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மே மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மேம்படும். புதிய மாற்றங்களைக் காணக்கூடும். மாத தொடக்கம் சற்று மெதுவாக இருந்தாலும், போக போக ஆற்றலும், உற்சாகமும் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு, தோல் அல்லது நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! மே மாதத்தில் சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். மறைமுக எதிரிகளிடம் சற்று கவனமாக இருங்கள். வலுமானமும் செலவுகளும் நிலையாக இருக்கும். அதாவது வந்த வேகத்தில் பணம் செலவாகும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நிறைய செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்திற்குள் மனக்கசப்புகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! மே மாதத்தில் புதிய வருமான வழிகளை கண்டறிவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை வலுவடையும். நல்ல பண ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்பம் மற்றும் குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளருடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் நிலைமை கட்டுப்பாட்டில் தான் இருக்கும். பிரச்சனைகள் திடீரென்று வரும் என்பதால், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மே மாதமானது மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆனால் இம்மாதத்தில் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ்வார்கள். தொழிலில் சில தடைகளை சந்தித்தாலும், மாத இறுதியில் நிலைமை மேம்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மே மாதத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திறமைகள் மேம்படும். நிதி நிலை வலுவடையும். மன கவலை நீடித்தாலும், தன்னம்பிக்கையால் அனைத்தையும் திறம்பட சமாளிப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! மே மாதத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க பொறுமையும், புரிதலும் அவசியம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் வழிகாட்டுதலும் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும், சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு மற்றும் கால் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



