Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
May 2026 Career Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அது நிதி ரீதியாகட்டும், தொழில் ரீதியாகட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அந்த வகையில் 2026 மே மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மே மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

முக்கியமாக தொழில், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன் இம்மாதத்தில் 2 முறை ராசியை மாற்றவுள்ளன. இப்படி புதனின் ராசி மாற்றங்களாலும், பிற கிரகங்களின் சுப நிலைகளாலும், மே மாதமானது சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
குறிப்பாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது மே மாதத்தில் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! மே மாதமானது தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மே மாதத்தில் வேலையில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வழிகளும் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளும் எதிர்பார்த்த லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு இம்மாதத்தில் நிறைவேறக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மே மாதத்தில் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மே மாதத்தில் நீண்ட காலமாக அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இம்மாதத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். திடீரென்று சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் இம்மாதத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கும் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




