Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Murungakkai Poricha Kulambu Recipe in Tamil: முருங்கைக்காய் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி சமைக்கும் ஒரு காய்கறியாகும். அதற்கு காரணம் அதன் சுவையாக இருந்தாலும் முருங்கைக்காயில் 'அந்த' விஷயத்துக்கு அவசியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று பொதுவான நம்பிக்கையும் ஒரு காரணமாகும். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையில் முருங்கைக்காயில் பல அவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்காயை குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக முருங்கைக்காயை சாம்பார் அல்லது காரக்குழம்பு செய்துதான் சாப்பிடுவோம், சில சமயங்களில் முருங்கைக்காயை வைத்து பொரியல் கூட செய்வோம். ஆனால் இது எதுவுமே இல்லாமல் முருங்கைக்காயை வைத்து சூப்பரான பொரிச்ச குழம்பு செய்யலாம். முருங்கைக்காயை இந்த மாதிரி குழம்பு செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சுவையான முருங்கைக்காய் பொரிச்சக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் பொரிச்ச குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முருங்கைக்காய் - 2
- பழுத்த தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டு - 10 பல்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி வரை
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை:
- முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றைக் கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து குழைந்து போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த விழுதை குக்கரில் சேர்த்து நன்கு கிளறவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். நறுக்கிய முருங்கைக்காயை ஒரு பாத்திரத்தில் வைத்து, தண்ணீர் சேர்க்காமலேயே அதை குக்கருக்குள் வைக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் உள்ள ஆவி முழுமையாக வெளியேறிய பிறகு, அதைத் திறக்கவும்.
- முருங்கைக்காய் உள்ள பாத்திரத்தை எடுத்து, வேகவைத்த முருங்கைக்காயை குழம்பில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, சாதத்துடன் பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
