Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Pattani Muttai Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அதுவும் சாதத்திற்கு என்று வரும்போது கிரேவி, பொடிமாஸ் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையை உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியுடன் சேர்த்து இந்த குருமாவை செய்யுங்கள். இந்த முட்டை மசாலா குருமா தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்தில் ஊற்றி சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை குருமா மிகவும் பிடிக்குமென்றால் ஒருமுறை இந்த பட்டாணி முட்டை குருமாவை ஒருமுறை அவசியம் முயற்சித்துப் பாருங்கள். இந்த முட்டைக் குருமா செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு சுவையும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். ஒரு முறை செய்தால் இந்த குருமாவை அடிக்கடி செய்ய சொல்லி வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள், இந்த குருமா அவ்வளவு சுவையானதாக இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு பட்டாணி முட்டைக் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பட்டாணி முட்டைக் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 8 முட்டை
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 2 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 ஸ்பூன் கறி மசாலா தூள்
- அரை ஸ்பூன் சீரகத்தூள்
- 2 ஸ்பூன் தயிர்
- 1 கப் அரைத்த தக்காளி
- 1 கப் தேங்காய் பால்
- அரை கப் பட்டாணி
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
செய்முறை:
- ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டைகளை 10 நிமிடங்கள் வேகவைத்து, குளிர்ந்த நீரில் போட்டு ஆறவிட்டு, பின்னர் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கைத் தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பட்டாணியை ஊறவைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி உருளைக்கிழங்கின் வெளிப்புறம் பொன்னிறமாகும் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் கறி மசாலா தூள், சீரகத் தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்த தக்காளியை சேர்த்து குழம்பை 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- பின்னர் தேங்காய் பாலை ஊற்றி, ஒரு கொதி வரும்வரை காத்திருக்கவும். பின்னர் தீயைக் குறைத்து, 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு ஏற்கனவே கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, முட்டைகள், உருளைக்கிழங்குகள் மற்றும் பட்டாணியை சேர்த்துக் கிளறவும்.
- உருளைக்கிழங்கு நன்கு மென்மையாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்தால் சுவையான பட்டாணி முட்டைக் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications