Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
Dubai Airport Alert for Indians: Don't Come Unless Flight Confirmed! Amid War Tensions -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக? | SBI Bank Card Reward Points New Rules April 1 -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
மணமணக்கும்.. ருசியான.. மிளகு ரசம் - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Milagu Rasam Recipe In Tamil: தற்போது காலநிலை மோசமாக இருப்பதால் நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. இப்படி சளி, இருமலால் சிரமப்படும் நபர் உங்கள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு அப்பிரச்சனையில் இருந்து நிவாரணமளிக்குமாறான உணவுகளை சமைத்து கொடுங்கள்.
சளி, இருமலில் இருந்து நிவாரணமளிக்கும் ஒரு அற்புதமான ரெசிபி தான் மிளகு ரசம். இந்த ரசம் சளி பிடித்திருக்கும் போது சற்று இதமாக இருப்பதோடு, நெஞ்சு சளியை கரைக்கவும் உதவும். ஏனெனில் மிளகில் சளி தொல்லையில் இருந்து நிவாரணமளிக்கும் சத்துக்கள் உள்ளன.

மேலும் மதிய வேளையில் டக்கென்று சமையலை முடிக்க நினைத்தால், சாதம் வைத்து, மிளகு ரசத்தை மட்டும் செய்து, அப்பளத்தை பொரித்து வைத்தால் போதும். சூப்பரான மதிய சமையல் தயார். ஆனால் உங்களுக்கு ரசம் அவ்வளவு ருசியாக வைக்கத் தெரியாதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் ஒருமுறை ட்ரை செய்யுங்கள். பின் பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ளோர் உங்களை பாராட்டுவதோடு, அடிக்கடி மிளகு ரசம் வைக்க சொல்லி கேட்பார்கள்.
உங்களுக்கு மிளகு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - பெரிய எலுமிச்சை அளவு
* சுடுநீர் - தேவையான அளவு
இடிப்பதற்கு...
* பூண்டு - 5 பல்
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை சுடுநீரில் 5 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, புளியை கைகளால் நன்கு பிசைந்து, கரைத்து
வடிகட்டி, புளி நீரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் இடி உரலில் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு இடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் இடித்து வைத்துள்ள
பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, அத்துடன் தேவையான
அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் மிதமான
தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான மிளகு ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











