Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக?
எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஆனது, அதன் எஸ்பிஐ கார்டு தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வருகிற 2026 ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி ஆனது அதன் எஸ்பிஐ கார்ட்டின் (SBI Card) வெகுமதி புள்ளிகள் கட்டமைப்பில் (State Bank of India ) செய்யப்பட்டு உள்ள முக்கிய திருத்தங்களை கோடிட்டு காட்டும் ஒரு வலைத்தள அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மாற்றம் - மாதாந்திர மீட்பு வரம்பு (Monthly redemption cap): ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐ அட்டைதாரர்கள் ஸ்டேட்மென்ட் கிரெடிட்டிற்காக (Statement credit) 1 மாதத்திற்கு அதிகபட்சம் ஆக 60,000 ரிவார்டு புள்ளிகளை (reward points) மீட்டெடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாவது மாற்றம் - பிக்ஸட் ரிடெம்ப்ஷன் மல்டிபிள்ஸ் (Fixed redemption multiples): வருகிற 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஸ்டேட்மென்ட் கிரெடிட்டிற்காக 4,000 புள்ளிகளின் மல்டிபிள்ஸ்-ல் (Multiples of 4,000 points) மட்டுமே ரிவார்ட் பாயிண்ட்களை மீட்டெடுக்க முடியும்.
மூன்றாவது மாற்றம் - விலக்குகள் (Exclusions): எஸ்பிஐ வெளியிட்டு உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேலே உள்ள இரண்டு நிபந்தனைகளும் ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்ட் (Air India SBI Signature Card), போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் (PhonePe SBI Card PURPLE) மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு செலெக்ட் பிளாக் (PhonePe SBI Card SELECT BLACK) ஆகியவற்றுக்கு பொருந்தாது.
விளம்பர சலுகைகள் குறித்த முந்தைய 2026 அப்டேட்கள்: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த திருத்தங்கள் ஆனது, ஜனவரி 15, 2026 அன்று அல்லது அதற்கு பிறகு தொடங்கப்பட்ட விளம்பர திட்டங்களுடன் இணைக்கப்பட்ட வெகுமதி புள்ளிகள் தொடர்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட மாற்றங்களை பின்பற்றுகின்றன:
அதென்ன மாற்றங்கள்? கேஷ்பேக் சலுகைகள் (cashback offers) மூலம் பெறப்பட்ட வெகுமதி புள்ளிகள், கேஷ்பேக் இடுகையிடப்பட்ட தேதியில் (cashback posting date) இருந்து 90 நாட்களுக்குள் பறிமுதல் (forfeited ) செய்யப்பட வேண்டும். மேலும் உடனடி தள்ளுபடி சலுகைகள் (Instant discount offers) மூலம் பெறப்பட்ட வெகுமதி புள்ளிகள், சலுகை மாத இறுதியில் (end of the offer month) இருந்து 120 நாட்களுக்குள் பறிமுதல் செய்யப்படும்.
இந்த அறிவிப்பு, வெகுமதி திரட்டல் மற்றும் மீட்பு கொள்கைகள் (Reward accrual and redemption policies) தொடர்பாக 2026 இல் எஸ்பிஐ கார்டு வெளியிட்ட தொடர் அப்டேட்களின் (Series of updates) ஒரு பகுதி ஆகும். மேலதிக விவரங்களுக்கு மற்றும் சந்தேகங்களுக்கு - எஸ்பிஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (SBI official website) கிடைக்கும் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்ய அட்டைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Credit: Gizbot
minor change in tittle



Click it and Unblock the Notifications











