Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
மதுரை ஸ்டைல் சிக்கன் தொக்கு ரெசிபி... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... ட்ரை பண்ணி பாருங்க...!
Madurai Chicken Thokku Recipe in Tamil: இந்த வார ஞாயிறு கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க போகிறீர்களா? அந்த சிக்கனை வாய்க்கு ருசியாக, அதே சமயம் இதுவரை நீங்கள் வீட்டில் செய்திராத ஒரு ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ஸ்டைலில் சிக்கன் தொக்கு வறுவலை செய்யுங்கள். மதுரையில் அசைவ உணவுகள் எவ்வளவு பிரபலமானவை நாம் நன்றாக அறிவோம்.
இந்த மதுரை சிக்கன் தொக்கு சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த மதுரை சிக்கன் தொக்கு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானதாகும்.

உங்களுக்கு மதுரை ஸ்டைல் சிக்கன் தொக்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை பெப்பர் ஸ்டைல் சிக்கன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மேரினேட் செய்ய:
- சிக்கன் - அரை கிலோ
- மஞ்சள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
அரைக்க:
- பிரியாணி இலை - 1
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 4
- ஏலக்காய் - 3
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
தொக்கு செய்ய:
- கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
- நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நறுக்கிய தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சிக்கனை குளிர்ந்த நீரில் 3 முறை கழுவி தண்ணீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து பொடியாக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், பின்னர் அரைத்த கொரகொரப்பான பொடியைச் சேர்த்து, வாசனை வரும் வரை தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து மற்றும் சிறிது உப்பு சேர்த்து வெங்காயத்தை சுருங்கும் வரை வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடங்கள் பச்சை வாசனை போய் தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- இப்போது ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து, சிக்கன் நிறம் மாறும் வரை 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
- பின்னர் மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், காஷ்மீர் மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கிளறி 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
- இப்போது 1 கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து, சிக்கனை கொதிக்க வைக்கவும். பின்னர் 5-7 நிமிடங்கள் மசாலா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
- பின்னர் மூடியை அகற்றி, தூக்கிலிருந்து எண்ணெய் பிரிந்து கெட்டியாகும் வரை 7 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். பின் உப்பு மற்றும் காரத்தைச் சரிபார்க்கவும்.
- இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறினால் அட்டகாசமான மதுரை சிக்கன் தொக்கு மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications