Latest Updates
-
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம்
புதன் வக்ர பெயர்ச்சியால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மிகவும் முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகமாகும். கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிப்ரவரி மாத இறுதியில், புதன் கும்ப ராசியில் அதன் வக்ர நிவர்த்தி கட்டத்தில் நுழைந்து சில வாரங்கள் அங்கேயே நிலைத்திருக்கப் போகிறார்.
பிப்ரவரி 26 ஆம் தேதி வக்ர நிவர்த்தியை தொடங்கிய புதன் மார்ச் 21 ஆம் தேதி அதே நிலையில் நீடிக்கப்போகிறார். புதனின் இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த மாற்றம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும். வாய்ப்புகளையும் வழங்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, புதனின் வக்ர நிவர்த்தி சாதகமாகப் பலன்களை அளிக்கப்போகிறது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். நீங்கள் வேலையில் இருந்தால், உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளையும், பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். அவர்கள் வியாபாரத்தில் எதிர்பாராத உயரங்களை அடைய வாய்ப்புள்ளது. அவர்களின் நிதிநிலையும், சேமிப்பும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது, அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றிகள் தேடிவரும். இலக்கியத் துறையில் இருப்பவர்கள் இப்போது அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள். தொழில் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இப்போது மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியை ஆளும் கிரகமாக புதன் இருப்பதால் இந்த வக்ர பெயர்ச்சியால் அவர்கள் நேரடிப் பலன்களை அனுபவிப்பார்கள். நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த வேலை இறுதியாக மீண்டும் தொடங்கப்படும். உங்கள் வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்கலாம். பழைய முதலீடுகள் அல்லது சேமிப்பிலிருந்து லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் துறையில் பெரிய உயரத்தை அடையலாம், அவர்களின் வேலையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் அவர்கள் மூதாதையர் சொத்துக்களால் மகிழ்ச்சியை அடையலாம்.
வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து அதிக லாபத்தை ஈட்டலாம். இந்த காலகட்டத்தில் திருமணமானவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைளில் சுறுசுறுப்பாக பங்கேற்கலாம்.
துலாம்
துலாம ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த வக்ர பெயர்ச்சி அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. வேலையில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். உங்கள் கருத்துக்கள் உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் கவரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். பணியிடத்தில் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும்.
இந்த காலகட்டத்தில் அலுவலகப் பணிகளில் இருப்பவர்கள் அசாதாரணமான முன்னேற்றம் அடைவார்கள். வேலை தொடர்பான பயணங்கள் லாபகரமாக இருக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்வார்கள். அவர்கள் இலக்குகளை அடையவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டைத் தொடரவும் இந்த சாதகமான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

