Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
வீட்டுல பீர்க்கங்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Peerkangai Bajji Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் வடை, பஜ்ஜி என்று ஏதாவது செய்து கொடுக்க சொல்வார்களா? எப்போதும் பஜ்ஜி செய்வதாக இருந்தால், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தான் பயன்படுத்தி செய்வோம். ஆனால் வேறு பல காய்கறிகளைக் கொண்டும் பஜ்ஜி செய்யலாம்.
அதுவும் உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் இருந்தால், அந்த பீர்க்கங்காயைக் கொண்டு பொரியல், சட்னி, குழம்பு என்ற செய்யாமல், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து பாருங்கள். இந்த பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் செய்வதற்கு சுலபமாக இருக்கும். அதுவும் கடையில் விற்கப்படும் பஜ்ஜி மாவிற்கு பதிலாக, வீட்டிலேயே ஒருசில பொருட்களைக் கொண்டு பஜ்ஜி மாவை தயாரித்து செய்யும் போது, பஜ்ஜியின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு பீர்க்கங்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* இட்லி மாவு - 1 கரண்டி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* நெய் - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* பீர்க்கங்காய் - 1
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருங்காயத் தூள்
ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1 கரண்டி இட்லி மாவை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, கைகளால் நன்கு
கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1/4 டீஸ்பூன் நெய்யை ஊற்றி, அத்துடன் 1 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பீர்க்கங்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, மெல்லிய
வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒவ்வொரு பீர்க்கங்காய் துண்டுகளையும் எடுத்து,
கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை
செய்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான பீர்க்கங்காய் பஜ்ஜி
தயார்.



Click it and Unblock the Notifications