Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
செட்டிநாடு பீர்க்கங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி... இப்படி செஞ்சா டிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...!
Peerkangai Poricha Kootu Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயை வைத்து சூப்பரான பொரிச்ச கூட்டு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் பீர்க்கங்காய் கூட்டு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
மேலும் இந்த பீர்க்கங்காய் கூட்டு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த கூட்டு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், பீர்க்கங்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் பொரிச்ச கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 பீர்க்கங்காய் தோல் நீக்கி நறுக்கியது
- அரை கப் பாசிப்பருப்பு
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் வெல்லம்
- தேவையான அளவு உப்பு
வறுத்து அரைக்க:
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 3 வர மிளகாய்
- ½ ஸ்பூன் கருப்பு மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- ¼ கப் தேங்காய் துருவல்
- 1 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- பீர்க்கங்காயைக் கழுவி, தோல் நீக்கி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும். கழுவிய பாசிப்பருப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து, பீர்க்கங்காய் மூடும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்.
- விசில் போட்டு மூடி பருப்பு மற்றும் காய்கறி நன்றாக வேகும் வரை வேகவைக்கவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், மிளகு மற்றும் சீரகத்தை வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் தேங்காய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். கலவையை ஆறவிட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- காய்கறி மற்றும் பருப்பு வெந்தவுடன், இந்த அரைத்த கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் வெல்லத்தையும் சேர்த்து கொதிக்க விடவும். கூட்டு நன்கு கொதித்து தேவையான அளவு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
- பின்னர் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- உளுத்தம் பருப்பு நிறம் மாறியதும் இதை கொதிக்க வைத்த கூட்டில் கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வவுதான் சூப்பரான பீர்க்கங்காய் பொரிச்ச கூட்டு ரெடி!



Click it and Unblock the Notifications