Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தாபா ஸ்டைல் தயிர் சிக்கன் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்...!
Dhaba Style Curd Chicken Recipe in Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? அதுவும் காலையில் பூரி செய்து சிக்கன் கிரேவி செய்து சாப்பிட திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் ஒரே மாதிரி சிக்கன் கிரேவியை செய்யாமல், ஒருமுறை இந்த தாபா ஸ்டைல் தயிர் சிக்கன் கிரேவியை செய்யிங்கள்.
இந்த சிக்கன் கிரேவி பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி சிக்கன் கிரேவியை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் இந்த மாதிரி தான் சிக்கன் கிரேவியை செய்ய சொல்வார்கள். இன்று உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைத்தால், இந்த கிரேவியை செய்து கொடுங்கள்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் தயிர் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 2 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 3 பச்சை மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கப் தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டேபிள் ஸ்பூன் கசூரி மேத்தி
- 4 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
சிக்கனை வதக்க:
- அரை கிலோ சிக்கன்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- தேவையான அளவு உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் கழுவிய சிக்கன் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை வதக்கவும். சிக்கன் அனைத்து பக்கங்களிலும் வதங்கும் வரை அதிக வெப்பத்தில் வதக்கவும். சிக்கனை 10 நிமிடங்கள் வதக்கி, ஒரு கிண்ணத்தில் எடுத்து ஒதுக்கி வைக்கவும்.
- பின் அதே கடாயில், மேலும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதைத் தொடர்ந்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனவுடன் வதக்கிய சிக்கனை சேர்த்து மசாலாவுடன் நன்கு கிளறவும்.
- பின்னர் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பின் மூடி வைத்து, சிக்கன் வேகும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- இறுதியாக கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் தயிர் சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications