Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Coorg Style Chicken Masala Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? எப்போது சிக்கன் வாங்கினாலும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் இந்த வாரம் கூர்க் ஸ்டைலில் சிக்கன் மசாலா செய்து சாப்பிடுங்கள்.
இந்த கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலா சப்பாத்தி, பூரி, இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது வித்தியாசமான சுவையில் இருக்கும். ஒருமுறை இந்த மசாலாவை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 4
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கையளவு
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய சிக்கனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து
நன்கு பிரட்டி ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, மிளகு, கடுகு,
சீரகம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, 1/2 கப் நீரை
ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம்
சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, மிதமான
தீயில் வைத்து, 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, சிக்கனை நன்கு கிளறி விட்டு,
மீண்டும் மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் புளிச்சாற்றினை ஊற்றி
கிளறி, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications











