Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
1/2 கிலோ சிக்கனை ஒருவாட்டி இப்படி தொக்கு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Chicken Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால், எப்போதும் கிரேவி, குழம்பு, வறுவல், 65 என்று தான் செய்வீர்களா? சிக்கனை சற்று வித்தியாசமான சுவையில் சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.
இந்த சிக்கன் தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக ப்ளைன் பிரியாணி செய்தால், அதற்கு இதை சைடு டிஷ்ஷாக செய்தால், சுவை வேற லெவலில் இருக்கும். இந்த சிக்கன் தொக்கு ரெசிபியை செய்வதற்கு மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட டக்கென்று செய்துவிடலாம்.

உங்களுக்கு சிக்கன் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 50 கிராம்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பட்டை - 2 இன்ச்
* அன்னாசிப்பூ - பாதி
* தண்ணீர் - 4 ஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* புதினா - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் 4 டீஸ்பூன் நீரை ஊற்றி வெங்காயத்தை வேக வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் தயிரை சேர்த்து ஒருமுறை கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்
தூள், சீரகத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை சேர்த்து கிளறி, 1 டம்ளர் நீரை ஊற்றி, உயர்
தீயில் வைத்து கொதி வந்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 15-20
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, உயர் தீயில் வைத்து
நீர் சற்று வற்றும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான சிக்கன்
தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications