Latest Updates
-
கேது நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
5 முக்கிய தொகுதிகளை கொண்ட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவையின் ரகசியம் இதாங்க! -
IPL 2026: சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிட கணிப்பு - எந்த அணி வெற்றி பெறும்? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் ஒன்றிணையும் 4 கிரகங்கள்: ஏப்ரல் 11 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
ருசியான கறிவேப்பிலை சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க -
ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர் -
குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுது! -
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 05 ஏப்ரல் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைச்சது நடக்கும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (05 ஏப்ரல் 2026-11 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்
உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது 'இத' அனுப்ப மறந்துடாதீங்க...!
Merry Christmas 2024: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்- 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாக கொண்டப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான அன்று அவரை வணங்கி, மக்களிடையே அன்பை பரப்ப மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினருக்கும் கோலாகலமாக கொண்டாடிவருகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே இத்தினத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடும். வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் மற்றும் கேக் தயாரிப்பது, அதனை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு வந்து பரிசு தருவது என இப்பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

இத்தகைய கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளுங்கள். இக்கட்டுரையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளோம்.

வாழ்த்து 1
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
வாழ்த்து 2
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
அன்பென்னும் பண்புகளை ஆணித்தரமாய் சொல்லிவிட
ஆயுளையே அவர் கொடுத்தார்
அகிலத்தின் விடுதலைக்காய் அவர் பிறந்த நாளின்று
அறியாமை போக்கிடுவோம்
பகைமையை அறுத்தெறிந்து
பாசமோடு வாழ்ந்திடுவோம்!
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள் தகர்த்துவிட விடியலென வந்த்துவிட்டார் விண்ணுலக தேவன் இயேசு கிறிஸ்து.. இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

வாழ்த்து 5
மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை
போற்றி பாடி கொண்டாடுவோம்
ஆர்ப்பரித்து அகமகிழ்வோம்
இந்த கிறிஸ்துமஸ் நாளிலே...!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

வாழ்த்து 6
மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவார்.
இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

வாழ்த்து 7
அன்று ஆயர்கள் கேட்ட
ஆச்சர்ய நற்செய்தியை
இன்று நாமும் கேட்போமா..
இயேசு நமக்காய் பிறந்தாரென...!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
நம் பாவங்களை போக்கிட
தேவன் மண்ணில் அவதரித்த தினம்
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
இந்நன்னாளில் உங்கள் குடும்பத்தில்
மகிழ்ச்சி பொங்கிட
அன்பு பெருகிட
வெற்றி நல்கிட
இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசை பெற்றுக்கொண்டு
இனிப்புகளை சாப்பிட்டு
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடுங்கள்.
இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்த்துக்கள்



Click it and Unblock the Notifications











