Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Benefits of Coconut Chutney: காலம் காலமாக தென்னிந்தியாவில் காலை உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு பிரதானமான சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். தேங்காய் சட்னி எவ்வளவுதான் சுவையான சைடிஷாக இருந்தாலும் அது உடல் எடையை அதிகரிக்கும், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை அதிகரிக்கும் என ஒரு நம்பிக்கை மக்களிடையே தீவிரமாக நிலவி வருகிறது.
தேங்காயில் கொழுப்பு அதிகமாக இருப்பது உண்மையாக இருந்தாலும் அதில் பிரதானமாக அமைந்திருக்கும் கொழுப்பு வகை, 'நிறைவுற்ற கொழுப்பு' ஆகும். அண்மைக்கால ஆராய்ச்சிகளின் படி, தேங்காய் சில தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேங்காய், தேங்காயின் தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் என ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. அதேபோல தேங்காய் சட்னியும் சில தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எடைக்குறைப்பு
ப்ரெஷான தேங்காயில் நிறைவுற்ற கொழுப்புகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை உடல் எடையைக் குறைக்க உதவும் நடுத்தர சங்கிலி டிரைகிளிசரைடுகள் ஆகும். இத்தகைய நடுத்தர சங்கிலி டிரைகிளிசரைடுகள் கொழுப்பாகச் சேமிக்கப்படாமல், நேரடியாக ஆற்றலாகப் பயன்படுத்தப்படுவதால், உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும், இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கொழுப்பின் அளவை குறைக்கும்
தேங்காயில் உள்ள 13.6 கிராம் நார்ச்சத்து மற்றும் அதிக லாரிக் அமிலம் ஆகியவை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகின்றன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, தமனிகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
எலும்புகளை வலுப்படுத்துகிறது
தேங்காயில் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான மூன்று முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை போதுமான அளவில் உள்ளது. எனவே, உங்கள் அன்றாட உணவில் தேங்காயைச் சேர்ப்பதன் மூலம், பலவீனமான எலும்புகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.
செரிமானத்தை ஊக்குவிக்கும்
தேங்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தேங்காய் சட்னி சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிற செரிமானப் பிரச்சனைகளைத் தடுக்கவும் செய்கிறது.
பாக்டீரியா எதிர்ப்பு
தேங்காய் சட்னியில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது உங்கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்
உயர் இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள், தேங்காய் சட்னியைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில், தேங்காய் சட்னியானது உடலில் உள்ள இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறப்பான உணவாகக் கருதப்படுகிறது.
இதயத்தைப் பாதுகாக்கும்
இரத்த நாளங்களில் உள்ள LDL மற்றும் HDL அளவுகளைச் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் தேங்காயில் நிறைந்துள்ளன. இது இதய இரத்த நாள மண்டலத்தை பாதுகாக்கும் சிறந்த உணவாக தேங்காயை மாற்றுகிறது. தேங்காய் சட்னியை உணவில் சேர்த்துக்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயங்களையும் குறைக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது
தேங்காய் சட்னி உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம், நம் உடல் அனைத்து உணவுகளையும் சரியாகப் பயன்படுத்தும் மற்றும் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் உணர வைக்கும். ஒரு நல்ல வளர்சிதை மாற்ற விகிதம், விரைவாக உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

