Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
என் படத்துக்காக ஒரு ஆளையே கொல்லலாமா? விளாசித் தள்ளிய தளபதி விஜய்
தளபதி 63 பட ஷூட்டிங்கின் போது நடந்த விபரீதமான விஷயத்துக்கு விஜய் என்ன முடித்தார் என்பது பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.
தளபதி 63 படத்தின் ஷூட்டிங் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் படம் தான் தளபதி 63.

அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் தொழில்நுட்ப பிரிவில் (லைட்மேன்) வேலை செய்கின்ற ஒருவருக்கு விபத்து நேர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதுகுறித்து விஜய் பேசிய விஷயம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

தளபதி 63 சூட்டிங்
தளபதி 63 சூட்டிங் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்குகள் அதிகம் சென்னையிலேயே ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு எடுத்து முடிக்கப்படும். பாடல் காட்சிகள் போன்ற சில தவிர்க்க முடியாத சீன்களுக்கு மட்டுமே வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்வார்கள். ஏனென்றால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நிகழ்த்துவதை விட சென்னையில் நடத்தினால் திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற நல்ல எண்ணத்துக்காகவே விஜய் இந்த முடிவுக்கு வந்து தொடர்ந்து அதை பின்பற்றியும் வருகிறார்.

எதிர்பாராத விபத்து
அந்நிலையில் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சன்ரைஸ் சட்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் கிரெயின் கொண்டு மிக உயரமாகக் கட்டப்பட்ட ஃபோகஸ் லைட் கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் என்பவரின் மீது இந்த லைட் விழுந்து விட்டது.

உயிருக்கு ஆபத்து
அவருக்கு மிக உயரத்தில் இருந்து லைட் தலையில் விழுந்ததால் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய் வருகை
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாக விரைந்து மருத்துவமனைக்குச் சென்ற விஜய், மருத்துவர்களிடமும் அவருடைய உறவினர்களிடமும் விசாரித்தார்.

உதவும் மனம்
கண்களில் கண்ணீர் வழிய அழுதேவிட்டார் விஜய். என்ன மாதிரியான உதவியாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் என்னிடம் கேளுங்கள், யோசிக்கவே வேண்டாம் என்று சொன்னதோட தன்னுடைய பர்சனல் போன் நம்பரையும் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

விசாரணை
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக அந்த படத்தின் புரடக்ஷன் மேனேஜரை அழைத்து விசாரித்திருக்கிறார். சன்ரைஸ் கால்சீட்டில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதனால் அதிகாலையில் 5 மணியில் 10 வரையிலும் இருந்து மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை படப்படிப்பு நடக்கிறது. காலையில் நடக்கும் காட்சிகள் காலையிலேயே எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாலை வெயிலில் அதற்கேற்ப மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் வேலையாட்கள் அவசரப்படுத்தப்படுகிறார்கள்.

விஜய்யின் உத்தரவு
இந்த வேகப்படுத்துதல் தான் உயிரையே எடுக்கும் நிலைக்குக் கொண்டு போய் விட்டிருக்கிறது. அன்று மாலை ஷூட்டிங் தொடங்கியதுமே யாரும் அவசர அவசரமாக வேலை செய்ய வேண்டாம் என்றும் என்னுடைய ஒரு நாள் கால்ஷீட் என்பது ஒருவருடைய உயிர் கிடையாது. ஒருநாள் ஷூட்டிங் தள்ளிப்போவதால் ஏதும் நடந்துவிடாது. உயிர்தான் முக்கியம். இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் என்னுடைய எந்த படத்திலும் நடக்கக்கூடாது. தொழிலாளர்களுடைய நலன் தான் முக்கியம் என்று புரொடக்ஷன் டீமை விளாசித் தள்ளிவிட்டாராம் விஜய்.

நெகிழ்ச்சியான சம்பவம்
இதைக் கேட்ட அங்கிருந்தம அத்தனை தொழிலாளர்களும் புரொடக்ஷன் டீமும், மருத்துவமனையில் இருக்கும் செல்வராஜின் குடும்பத்தினரும் விஜய்யின் இந்த இளகிய மனமும் அன்பும் அக்கறையையும் நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறார்களாம். டைரக்டர் தான் கொஞ்சம் அப்சட்னு சொல்லிக்கிறாங்க.



Click it and Unblock the Notifications
