For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்றால் ஏன் இந்த வேறுபாடு?

விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்றால் வீராங்கனைக்கு தட்டும் வீரருக்கு கோப்பையும் ஏன் வழங்கப்படுகிறது தெரியுமா?

|

நேற்று முந்தினம் நடந்த பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து கொண்ட இந்த போட்டி பாரீஸில் நடந்திருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்திற்காக ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் திம் மோதினார்கள்.

இதில் டொமினிக் திம்மை வீழ்த்தி பதினோராவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் நடால். இந்த நேரத்தில் டென்னீசைப் பற்றிய ஒரு சுவாரஸ்யத் தகவலை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

டென்னிஸ் வரலாற்றின் மிகப் பழமையான போட்டி தான் விம்பிள்டன். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா ஒப்பன்,பிரெஞ்சு ஓப்பன், அமெரிக்க ஒப்பன்,விம்பிள்டன் என டென்னிஸ் கிராண்ட்ஸ் ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகிறது. விம்பில்டன் மட்டுமே புல் தடையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம் ஆகும்.

Image Courtesy

#2

#2

இந்த விம்பிள்டன் போட்டியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உண்டு. வீரர்கள் வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். மைதானத்திற்குள் விளம்பரங்கள் செய்யப்பட மாட்டாது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிற ஆண்களுக்கு தங்க கோப்பையும் பெண்களுக்கு தங்கத்திலான தட்டும் வழங்கப்படுகிறது. இந்த தட்டிற்கு வீனஸ் ரோஸ்வாட்டர் டிஷ் என்றும் பெயர் உள்ளது.

Image Courtesy

#3

#3

ஒரே போட்டி ஆண் வெற்றி பெற்றால் ஒரு பரிசும் அதே பெண் வெற்றிப் பெற்றால் வேறொரு பரிசும் கொடுக்கிறார்களே.... ஏன் தெரியுமா? இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 130 வருடத்திற்கு முன்பு நடந்த வரலாற்றினை தெரிந்து கொள்ள வேண்டும்.

Image Courtesy

#4

#4

1877 ஆம் ஆண்டு நடைப்பெற்ற முதல் விம்பிள்டன் போட்டியில் ஆண்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து 1887 ஆம் ஆண்டு பெண்களும் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வருடம் முன்னதாக அதாவது 1886 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் வென்ற வீரருக்கு கோல்டன் கப் வழங்கப்பட்டது. அதில் ஷேம்பியன் ஆஃப் வோர்ல்ட் என்று சொல்லி பொறிக்கப்பட்டிருந்தது.

Image Courtesy

#5

#5

இதற்கு முன்னால் சாம்பியன் பட்டம் வென்றவர்களின் பெயர்கள் அந்த கப்பினைச் சுற்றி பொறிக்கப்பட்டிருந்தது. அதை கருப்பு மற்றும் சில்வர் நிற இழைகளால் அலங்கரித்திருந்தார்கள்.

இதே போலத்தான் பெண்களின் கோப்பைக்கும் வடிவமைக்கப்பட்டது.

Image Courtesy

#6

#6

முதலில் இதனை பிர்மிங்கம் எல்கிங்டன் என்ற நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் வடிவம் அப்படியே ஜெர்மனைச் சேர்ந்த கேஸ்பர் எண்ட்ரலின் என்பவர் உருவாக்கிய வடிவத்தை ஒத்ததாக இருந்தது.

இவர் பதினாராம் நூற்றாண்டில் கார்வெர் ஃப்ரான்காய்ஸ் ப்ராய்ட் என்பவர் வடிவமைத்ததை முன்னோடியாக கொண்டு இதனை வடிவமைட்திருந்தார். இதன் மதிப்பு காரணமாக அதிக வேலைப்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டிருந்தன.

Image Courtesy

#7

#7

இந்த ப்ளேட்டில் நடுவில் ஒரு பெண் விளக்கு ஏந்தியும் இன்னொரு கையில் ஒரு ஜக் பிடித்து நிற்பது போல இருக்கும். அதைத் தவிர அந்த பெண்ணை சுற்றி பூமி, தண்ணீர், காற்று மற்றும் நெருப்பு ஆகியவை இருக்கிறது. அதோடு அந்த தட்டின் மேல் பகுதிகளில் ஏழு கலைகளை குறிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#8

#8

இது பெண்களை போற்றும் வகையிலேயே இருந்தாலும் இது வெற்றி பெறுகிற பெண் வீராங்கனையை அவமாரியாதை செய்வது போலாகும். பெண்களுக்கும் கோப்பை வழங்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது.

ஆனால் இது பெண்களை அடிமையாகவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படி வழங்கப்படவில்லை. பெண்ணின் பெருமைகளை போற்றும் விதமாகத்தான் இது வழங்கப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

Image Courtesy

#9

#9

ஆரம்ப காலத்தில் பெண்ணிற்கு வீட்டு வேலை செய்வது தான் முதன்மையான வேலையாக இருந்திருக்கிறது. முதன் முதலாக வெளியில் ஒரு போட்டியென்று வரும் போது அந்தப் பெண்ணை உற்சாகப்படுத்தும் விதமாக அவள் அன்றாடம் சமையலறையில் பயன்படுத்துகிற தட்டு வழங்கப்பட்டிருக்கிறது நாளாக நாளாக அதன் தரம்,வேலைப்பாடு,விலை எல்லாம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பெண் அடிமைத்தனத்தின் அடையாளமாக பெண் வெற்றி பெற்றால் இந்த நூற்றாண்டிலும் தட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் புலம்பி வருகிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Why Women Winners Get Plate In Wimbledon

Why Women Winners Get Plate In Wimbledon
Story first published: Tuesday, June 12, 2018, 14:19 [IST]
Desktop Bottom Promotion