For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சார்லி சாப்ளினை திரைக்கு அறிமுகப்படுத்திய இவர் யாரென்று தெரியுமா?

  |

  பழங்கால கதைகள் கேட்பது எல்லாருக்கும் சுவரஸ்யமாக இருக்கும். இன்றைக்கு இருக்கும் வடிவத்திற்கும் அந்த சம்பவம் நடக்கும் போது இருந்த வடிவம், அப்போதை சூழ்நிலை, அப்போதைய மக்கள் என்று நம்முடைய நம் மூதாதையர்களின் பின்னணி கடந்த கால வாழ்க்கை தெரிந்து கொள்வது என்பது சுவாரஸ்யமானது தான்.

  அப்படி சுவாரஸ்யமான சில சம்பவங்களின் தொகுப்பும் அதன் பின்னணியில் நடந்திருக்கக்கூடிய சில சுவாரஸ்யமான கதைகளும் இங்கே தொகுப்பாய் வந்திருக்கிறது. சில உங்கள் கற்பனையை விரிவாக்கும், சில இதுவரை நீங்கள் நம்பியிருந்தவற்றை பொய்க்கும் சில உங்களை ஆச்சரியப்படுத்தும்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   #1

  #1

  இன்றைக்கு உயரமான கட்டிடங்களை கட்டுவதற்கு ஏற்ப பல வசதிகள், தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஆனால் ஆரம்ப காலங்களில்? 1950 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள சிர்கா என்ற இடத்தில் உயரமான கட்டிடம் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

  அவ்வளவு உயரத்திற்கு ஏறிய கட்டிட பணியாளர்கள் அங்கேயே உட்கார்ந்து தங்களது உணவை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  Image Courtesy

  #2

  #2

  1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எஸ்கேப் டு விக்டரி. வட அமெரிக்காவில் விக்டரி என்ற பெயரில் வெளியானது. இரண்டாம் உலகப் போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் ஜெர்மனிக்கு எதிராக ஒரு கால் பந்தாட்ட குழுவை உருவாக்கி வெற்றி பெறுகிறார்கள்.

  இதில் நடிகர்கள் நடிகைகள் மட்டுமின்றி உண்மையான விளையாட்டு வீரர்கள் பலரும் பங்கேற்று நடித்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் பீலே.

  Image Courtesy

  #3

  #3

  பீலே பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் ஆவார். கால்பந்தாட்ட உலகில் முடிசூடா மன்னனாக திகழும் இவர் அமெரிக்காவில் கால்பந்தாட்டத்தை பிரபலப்படுத்தியவர். கால்பந்தாட்டத்தில் பல்வேறு உலக சாதனைகளை செய்திருக்கிறார் கிட்டத்தட்ட 90 முறைக்கும் மேல் தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து ஹாட்ரிக் கோல் சாதனை செய்திருக்கிறார்.

  இவரின் இன்னொரு செல்லப்பெயர் கருப்பு முத்து. இவரும் விக்டரி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்பட காட்சியின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

  Image Courtesy

   #4

  #4

  முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமையத்தில் நச்சு வாயுவை வெளியிட்டு மக்களை கொத்து கொத்தாக கொல்லும் யுக்தியை செயல்படுத்த துவங்கியிருந்தார்கள். எந்த நேரத்தில் எங்கிருந்து நச்சுப்புகை வெளிவரும் என்றே தெரியாது. சிலர் மூச்சுத்திணறி அங்கேயே செத்து விழுந்தார்கள். சிலருக்கு நிரந்தரமாக பார்வைக்குறைபாடு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன.

  Image Courtesy

  #5

  #5

  இதனால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டார்கள். இதனை தவிர்க்க நினைத்த பிரிட்டன் அரசாங்கம் தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் கேஸ் மாஸ்க் ஒன்று வழங்கியது. சில நிறுவனங்கள் குதிரை மற்றும் நாய்களுக்கு கூட கேஸ் மாஸ்க் வழங்கியது.

  Image Courtesy

  #6

  #6

  குழந்தைகள், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கூட கேஸ் மாஸ்க் பொருத்தப்பட்டது. எந்த நேரத்தில் ஹிட்லர் நச்சு வாயுவால் தாக்குதல் நடத்துவான் என்று தெரியாது அதனால் கண்டிப்பாக எல்லா நேரங்களிலும் இதனை நீங்கள் அணிந்திருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது.

  Image Courtesy

  #7

  #7

  பாப் இசை உலகின் மன்னன் என்று புகழப்பட்ட மைக்கேல் ஜாக்சன் என்று சொன்னாலே உடல் முழுவதும் மறைத்து அவர் அணியும் ஜிகுஜிகு கோட், நீளமான முடி, முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெள்ளைச்சாயம் பூசியதைப் போல இருக்கும் முகத்தைத் தான் பார்த்திருப்போம். பலருக்கும் மைக்கேல் ஜாக்சனின் உண்மையான முகம் எதுவென்றே தெரியாது.

  Image Courtesy

  #8

  #8

  இப்போது நாம் எப்படி கடந்த காலத்தை தேடிச் செல்கிறோமா? அதே போல கடந்த காலத்தில் இருந்தவர்கள் எதிர்காலத்தை நோக்கி கற்பனை செய்திருக்கிறார்கள். எபோனி என்ற பத்திரிக்கை 1985 ஆம் ஆண்டு அப்போதிருந்த பிரபலங்கள் 2000 ஆம் ஆண்டு எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து படங்களை வெளியிட்டிருந்தது.

  சிகாகோவைச் சேர்ந்த கலைஞரின் கைவண்ணத்தில் மைக்கேல் ஜாக்சன் எப்படி இருந்திருப்பார் என்று நாமும் பார்க்கலாம்!

  Image Courtesy

  #9

  #9

  அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வந்து அதிலிருந்து மீண்டிருக்கும் நமக்கு அடிமை முறையைப் பற்றி எடுத்துச் சொல்ல இந்த புகைப்படம் ஒன்று சான்றாய் இருக்கிறது. சந்தையில் பொருட்களை விற்பது போல ஒரு கடையின் பெயரைப் பாருங்கள் நீக்ரோக்கள் விற்பனை மற்றும் ஏலம் என்று விளம்பரம்!

  அதோடு வாசலில் ஒரு காவலாளி துப்பாக்கியுடன்.... பார்க்கும் போதே பயங்கரமாய் இருக்கிறதல்லவா?

  Image Courtesy

  #10

  #10

  இந்த பொருட்களை எல்லாம் பார்த்தால் ஒருவரின் நியாபகம் வந்திருக்க வேண்டுமே.... நம் நாட்டின் தேசப்பிதா என்றும் காந்தி தாத்தா என்று அழைக்கப்பட்ட காந்தி மரணமடைந்த பிறகு அவரிடம் இருந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவை தான் இது!

  Image Courtesy

  #11

  #11

  அமெரிக்காவில் 1910 ஆம் ஆண்டு புகழ்ப்பெற்ற நடிகை, இயக்குநர் என பல முகங்களை கொண்டவர். இவர் தான் சார்லி சாப்ளினை முதன் முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார். சார்லி சாப்ளினுடன் கிட்டத்தட்ட பன்னிரெண்டு வெற்றிப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

  1923 ஆம் ஆண்டு டிபியால் பாதிக்கப்பட்ட இவர் 1930 ஆன் ஆண்டு தன்னுடைய 36வது வயதில் மரணமடைந்தார்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Rare historical Photos And Their Interesting Story

  Rare historical Photos And Their Interesting Story
  Story first published: Saturday, June 23, 2018, 12:08 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more