விமானத்தில் பயணிக்கும் போது தற்கொலை செய்து கொண்ட விமானிகள்!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த 30 வருடங்களில் சுமார் 44 விமானிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுள் பலர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, பல உயிர்களை கொன்று தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போவது, விமானத்தில் பயணிக்கும் போது தற்கொலை செய்து கொண்ட விமானிகள் பற்றி தான். தற்கொலை செய்து கொள்பவர்களை கோழை என்று கூறலாம். எதையும் எதிர்த்து போராடி வாழத் தெரியாதவன் தான் தற்கொலை செய்து கொள்வான்.

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள விமானிகளும் அப்படித் தான். ஆனால் இவர்களை கொஞ்சம் சுயநலவாதிகள் என்றும் கூறலாம். ஏனெனில் தன்னை நம்பி ஏறிய பலரது உயிரைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், தற்கொலை செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கமீல் அல்-படோட்டி - எகிப்து ஏர் விமானம் 990

கமீல் அல்-படோட்டி - எகிப்து ஏர் விமானம் 990

எகிப்து ஏர் விமானம் 990 விபத்துள்ளானதை ஒட்டி அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நடத்திய விசாரணையில், அந்த விமானத்தை ஓட்டிய விமானி கமீல் அல்-படோட்டி, பயணித்துக் கொண்டிருக்கும் போது விமானத்தின் என்ஜினை அணைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரிய வந்தது. இந்த விமான விபத்தின் போது சுமார் 218 பேர் இறந்தனர்.

Image Courtesy

ஆன்ட்ரியாஸ் லுபிட்ஸ் - ஜெர்மன்விங்ஸ் விமானம் 9525

ஆன்ட்ரியாஸ் லுபிட்ஸ் - ஜெர்மன்விங்ஸ் விமானம் 9525

இந்த விமான விபத்து மார்ச் மாதம் 24 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு பிரஞ்சு ஆல்ப்ஸில் நடந்தது. இந்த விமான விபத்தின் போது 144 பயணிகள் இறந்தனர். இந்த விமானத்தை ஓட்டிய ஆன்ட்ரியாஸ் என்னும் விமானி தன் சொந்த வாழ்க்கையில் இருந்த பிரச்சனையால், உடன் பணிபுரியும் விமானி கழிவறை செல்லும் இடைவெளியில், அறையை அடைத்துவிட்டு, பிரஞ்சு ஆல்ப்ஸில் விபத்தை ஏற்படச் செய்துள்ளார்.

Image Courtesy

ஹெர்மினியோ டோஸ் சாண்டோஸ் பெர்னாண்டஸ் - மொசாம்பிக் ஏர்லைன்ஸ் விமானம் 470

ஹெர்மினியோ டோஸ் சாண்டோஸ் பெர்னாண்டஸ் - மொசாம்பிக் ஏர்லைன்ஸ் விமானம் 470

இந்த விமான விபத்தும் ஜெர்மன்விங்ஸ் விமானம் 9525 நடந்தது போன்றே நடந்துள்ளது. இந்த விமானத்தின் கேப்டன் பெர்னாண்டஸ் ஆட்டோ-பைலட் விருப்பதை தேர்வு செய்து, விமானத்தை விபத்துள்ளாக்கியுள்ளார். இந்த விமான விபத்தால் 33 அப்பாவி பயணிகள் இறந்துள்ளனர். இந்த சோகமான விமான விபத்து 2013 ஆம் ஆண்டு நடந்துள்ளது. ஆனால் விமானி ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கான விடை இன்னும் மர்மமாகவே உள்ளது.

Image Courtesy

சு வே மிங் - சில்க்ஏர் விமானம் MI 185 (1997)

சு வே மிங் - சில்க்ஏர் விமானம் MI 185 (1997)

கேப்டன் சு வே மிங் நிதி நெருக்கடியால் அவஸ்தைப்பட்டு வந்தார். இவர் தற்கொலை செய்து கொள்ளும் முன், தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்காக இன்சூரன்ஸ் தாக்கல் செய்திருந்தார். அவரது இன்சூரன்ஸ் நடைமுறைக்கு வந்ததும், அதே நாளில் விமானத்தை விபத்துள்ளாக்கி தான் தற்கொலை செய்ததோடு, உடன் 104 பயணிகளையும் கொன்றுள்ளார்.

Image Courtesy

கிறிஸ் பாட்ஸ்வே - ஏர் போட்ஸ்வானா சம்பவம்

கிறிஸ் பாட்ஸ்வே - ஏர் போட்ஸ்வானா சம்பவம்

கேப்டன் கிறிஸ் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி விமானத்தை விபத்துள்ளாக்கியுள்ளார். அதுவும் சர் சரெட்சே காமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தை எடுத்து, 2 மணிநேரம் அங்கேயே வட்டமடித்து சுற்றியுள்ளார். பின் தன்னைத் தானே கொலை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு, ஓடுதளத்தில் இருந்த வேறு இரு ஏடிஆர் 42s விமானங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List Of Pilots Who've Committed Suicide While On Duty

Here is a list of pilots who committed suicide while they were on duty. These are the pilots who were depressed and sad in their personal lives. Read on to know more...
Story first published: Thursday, July 7, 2016, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter