இன்னும் சில வருடங்களில் அழிந்து மறையக்கூடிய நகரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கை சீற்றங்களால் ஒரு இடம் அழிவதற்கு நாம் நம் பூமி தாய்க்கு செய்யும் தீங்குகள் தான் காரணம். நாம் ஒவ்வொரு நாளும் பூமித் தாயை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் ஒரு கட்டத்தில் பூமித் தாய் கோபம் கொண்டு, நாம் தாங்க முடியாத அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இப்போது இக்கட்டுரையில் இன்னும் சில காலங்களில் அழிந்து மறையக்கூடிய நகங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள நகரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அழகானவை. பூமியில் உள்ள அந்த அழகான நகரங்களை இன்னும் சில வருடங்கள் கழித்து புத்தகங்களில் காண வேண்டி வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாங்காங்

பாங்காங்

கண்ணைப் பறிக்கும் அழகைக் கொண்ட பாங்காங் என்னும் நகரம், மெதுவாக பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியுமா? இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் நிலக்குடைவுகள் (Underground water caverns) தான். இதனால் இந்த நகரத்தின் நிலப்பகுதி பலவீனமாகி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோ

அமெரிக்காவில் உள்ள மிகவும் அற்புதமான ஓர் நகரம் தான் சான் பிரான்சிஸ்கோ. இந்த நகரமானது மிகவும் தவறான நிலக் கோட்டின் மேல் அமைந்துள்ளதால், இங்கு 75 சதவீதம் உயர் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரும் வாய்ப்பு உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் இந்த நகரம் முழுவதும் அழியும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெனிஸ்

வெனிஸ்

உலகிலேயே வெனிஸ் மிகவும் கவர்ச்சிகரமான அழகிய நகரம். ஆனால் ஒரு கெட்ட செய்தி இந்த நகரம் முழுமையாக மறையப் போகிறது என்பது தான். இந்த நகரத்தில் உள்ள கட்டிடங்கள் ஒவ்வொரு நாளும் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

மெக்ஸிகோ

மெக்ஸிகோ

மெக்ஸிகோவின் பெரும்பாலான பகுதி உலர் ஏரிப்படுகையின் மேல் அமைந்துள்ளது. மேலும் இந்த நகரம் ஒவ்வொரு வருடமும் 4 இன்ச் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 40 வருடத்தில், இந்த நகரமானது சுமார் 10 மீட்டர் மூழ்கியுள்ளது என்றால் பாருங்கள்.

ப்யாந்ஜல்

ப்யாந்ஜல்

இது ஆப்பிரிக்காவின் புறநகரில் அமைந்துள்ள ஒரு நகரம். ஒரு முக்கிய கவலை என்னவெனில், இங்கு கடல் மட்ட நீர் உயர்ந்து கொண்டே இருப்பது தான். கலோரப் பகுதிகள் மெரிவாக அரிக்கப்பட்டு இருப்பதால், இன்னும் சில வருடங்களில் இந்த நகரத்தைக் காண்பது என்பது சந்தேகம் தான்.

நேபிள்ஸ்

நேபிள்ஸ்

இத்தாலியில் அமைந்துள்ள நேபிள்ஸ், வரலாற்றில் உள்ள மிகவும் பழமையான நகரம். இது ஒரு முக்கிய சுற்றுலாத்தளமும் கூட. இந்த நகரமானது வேசுவியஸ் எரிமலையின் அடுத்து அமைந்துள்ளது. இந்த எரிமலை தான் பாம்பீ என்னும் நகரத்தையே அழித்தது. மேலும் ஆராச்சியாளர்கள் இந்த எரிமலை செயலில் தான் உள்ளது மற்றும் எந்நேரமும் அது வெடிக்கலாம் என்று கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Cities That Are Going To Disappear

    Here is the list of cities that will no longer be on the map in the coming time. These are some of the major cities that will be wiped away! Find out more..
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more