கொசுக்கள் ஏன் எல்லோரையும் கடிக்காமல் சிலரை மட்டும் கடிக்கிறது என்று தெரியுமா?

By: Ashok CR
Subscribe to Boldsky

ஒவ்வொரு கோடைக்காலத்திலும் நம் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகள் வழியாக ஊடுருவி, உங்களை பிய்த்து திண்ணத் தொடங்கி விடும் கொசுக்கள். அதுவும் அந்தி சாயும் நேரம் வெளியே சென்றோமானால் நம்மை சுற்றி கடித்து நாசம் செய்துவிடும்.

கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும் இயற்கைப் பொருட்கள்!!!

சிலருக்கு கொசுக்கள் என்றால் காந்தம் போல. எப்போதும் அவர்களை நாடி வந்து கடிக்கும். ஆனால் சிலருக்கோ அது அப்படியே நேர் எதிர். ஏன் அது சிலரின் மீது மட்டும் இரத்தத்தை உறிஞ்சுகிறது? சிலர் சாயங்காலம் வெளியே வந்தாலும் கூட அவர்களை அவைகள் தொடுவது கூட அல்ல? இந்த அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு சரியான கலவையில் பார்வையையும் வாசனைகளையும் அளிப்பார்கள். ஒரு கூட்டத்தில் தமக்கான இலக்குகள் யார் யார் என்பதை, கொசுக்கள் தன் உணர்வுகளை கொண்டு கண்டுபிடித்து விடும். சரி, உத்திரவாதமாக உங்களை கொசு கடிப்பதற்கான 10 காரணங்களைப் பற்றி சற்று பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடர்ச்சியாக மூச்சு விடுதல்

தொடர்ச்சியாக மூச்சு விடுதல்

காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை கொசுக்கள் சுலபமாக தெரிந்து கொள்ளும். நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக மூச்சு விடுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களிடம் இருந்து இரத்தம் உறியப்படும். கார்பன் டை ஆக்சைடு இருந்தால் அருகிலேயே உயிருள்ள, சுவாசிக்கின்ற, இரத்தம் நிறைந்த மிருகம் அருகில் உள்ளது என்பதை அது தெரிந்து கொள்ளும். ஒரு முறை அது அதனை உணர்ந்து விட்டால், மூலத்தை அடையும் வரை, கார்பன் டை ஆக்சைடு வாயுவை பின்பற்றி பரந்த வண்ணம் இருக்கும்.

குளிப்பதை தவிர்ப்பது

குளிப்பதை தவிர்ப்பது

எந்தளவுக்கு உங்களிடம் இருந்து நாற்றம் வருகிறதோ, கொசுக்களுக்கு உங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம். டியோடரண்ட்டை கை விடுங்கள், சோப்பு போடுவதை நிறுத்துங்கள், பிறகு என்ன கொசுக்களை அடிக்க துவங்குங்கள்.

 நடப்பது அல்லது ஓடுவது

நடப்பது அல்லது ஓடுவது

கொசுக்கள் தங்களின் பலி யார் என்பதை முதலில் தங்களின் பார்வையை வைத்து தீர்மானிக்கும், இரண்டாவதாக மனிதர்களின் அசைவை வைத்து தங்களின் குறியை தீர்மானிக்கும். வெளியே செல்லுங்கள், நடை கொடுங்கள், பூங்காக்களில் ஓடுங்கள், ஜாகிங் செல்லுங்கள், மேலேயும் கீழையும் குதித்து உடற்பயிற்சி செய்யுங்கள்! எப்படி தானாக கொசுக்கள் வந்து உங்களை கவ்வுகிறது என்பதை மட்டும் பாருங்கள்.

அதிகமாக வியர்த்தல்

அதிகமாக வியர்த்தல்

வியர்ப்பது என்பது கொசுக்களை ஈர்க்கும் சிறப்பான கலவை ஆகும் - ஈரப்பதமும் வாசனையும். கொளுத்தும் கோடைக்காலத்தில், பகல் அல்லது சாயங்கால நேரம் வெளியே சென்று வியர்வை சிந்த வேலைப்பாருங்கள். கொசுக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றிகளை கூறும்.

வெதுவெதுப்புடன் இருப்பது

வெதுவெதுப்புடன் இருப்பது

வெப்பத்தை தேடி அலையும் ஏவுகணைகளாக கொசுக்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவுக்கு வெப்பத்துடன் இருக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் உங்களை கண்டு கொள்ளும். தொலைவில் இருந்து அவைகளால் உங்கள் உடல் சூட்டை உணர முடியாமல் போனாலும் கூட, சில அடி தொலைவில் இருக்கும் போது உங்களின் வெப்பத்தை அவை எளிதாக உணரும்.

 இருண்ட நிறத்தில் ஆடையணிவது

இருண்ட நிறத்தில் ஆடையணிவது

இருண்ட நிறங்களுக்கு, குறிப்பாக நீல நிறம் என்றால் கொசுக்கள் வேகமாக செயலாற்றும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளது. வேண்டுமெனில் பழுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை தூக்கி எறியுங்கள். மாறாக ஜீன்ஸ் மற்றும் கருப்பு டீ-ஷர்ட் அணியுங்கள். இப்போது கொசுக்களுக்கு நீங்கள் தான் சுலபமான இலக்காக மாறி விடுவீர்கள். நேராக உங்கள் மீது தான் தரையிறங்கும்.

பெர்ஃப்யூம் அல்லது வாசனை திரவியங்கள்

பெர்ஃப்யூம் அல்லது வாசனை திரவியங்கள்

உங்கள் உடல் நாற்றத்தை உங்களால் பொறுக்க முடிவில்லை என்றால் கொசுக்களை ஈர்க்க எதிர்மறையான மற்றொரு விஷயத்தை செய்யலாம். அளவுக்கு அதிகமான பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள். குறிப்பாக மலர் வாசனைகள் என்றால் கொசுக்களை வேகமாக ஈர்க்கும்.

உங்கள் சருமத்தின் மீது ஆல்ஃபா ஹைட்ராக்ஸி பொருட்களை பயன்படுத்துதல்

உங்கள் சருமத்தின் மீது ஆல்ஃபா ஹைட்ராக்ஸி பொருட்களை பயன்படுத்துதல்

நம் உடல் இயற்கையாக உற்பத்தி செய்யும் லாக்டிக் அமிலம் கொசுக்களை வேகமாக ஈர்க்கும். பல சரும பராமரிப்பு பொருட்களில் லாக்டிக் அமிலமும் கலந்துள்ளது. இதனால் அவைகளை பயன்படுத்தும் போது உங்களுக்கும், இரத்தத்தை உரியும் கொசுக்களுக்குமான கெமிஸ்ரி சூப்பராக ஒத்துப்போகும். "ஆல்ஃபா ஹைட்ராக்ஸி" என பொருட்களின் லேபில் மீது இருந்தால், அது அதிகமான அளவு லாக்டிக் அமிலத்தை அளிக்கும்.

 உங்கள் சாக்ஸை மாற்றாதீர்கள்

உங்கள் சாக்ஸை மாற்றாதீர்கள்

ஆம், அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையிலான விஷயம் இது. பொதுவாக பாதங்களின் வாசனை என்றால் கொசுக்களுக்கு பிடிக்கும். பூச்சியியல் வல்லுநர் டேனியல் எல்.க்ளைன், கொசுக்களை கவர்வதற்காக ஒரு அழுக்கு சாக்ஸ் ஒன்றை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தார். 3 நாட்கள் பழமையான அந்த சாக்ஸை கொசுக்களால் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, மனித பாதங்களில் உருவாகும் பாக்டீரியாக்களினால் பெருமளவு கொசுக்கள் மொய்க்கக்கூடும்.

பீர் குடித்து சீஸ் உண்ணுங்கள்

பீர் குடித்து சீஸ் உண்ணுங்கள்

ஒரு ஹோட்டலில் பீர் குடிப்பவர்களை தான் கொசுக்கள் அதிகமாக குறி வைக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீஸ் கலந்து செய்யப்பட நொறுக்குத் தீனிகளுடன் பீர் குடித்து மகிழும் போது, தாக்குதலுக்கு நீங்களே தயாராகி கொண்டிருக்கிறீர்கள். லிம்பர்கர் சீஸ் என்பது உங்கள் மீது நாற்றத்தை உண்டாக்கும் அதே பாக்டீரியாவை கொண்டு செய்வதாகும்.

இரத்த பிரிவுகள்

இரத்த பிரிவுகள்

பல்வேறு இரத்த பிரிவுகள் ஒன்று கொசுக்களை ஈர்க்கும் அல்லது அவைகளை வெறுப்படையச் செய்யும். ஒரு வேளை, ஒரு கும்பலில் கொசுக்கள் உங்களை மட்டும் சகட்டு மேனிக்கு கடிக்கிறது என்றால் நீங்கள் 'ஓ' பிரிவு இரத்தத்தை கொண்டிருப்பீர்கள். ஜப்பானில் ஒரு விஞ்ஞானி குழு, சில கொசுக்களின் உறிஞ்சி, கடிக்கும் தன்மையை இழக்கச் செய்து, அவைகளை மனிதர்கள் மீது விட்டது. 'ஏ' மற்றும் 'பி' பிரிவு இரத்தத்தை கொண்டவர்களை விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் 'ஓ' பிரிவு இரத்தத்தை கொண்டவர்கள் மீதே அமர்ந்தது.

கொசுக்கள் இனிப்பு உறிஞ்சிகள்

கொசுக்கள் இனிப்பு உறிஞ்சிகள்

சாக்கரைட்ஸ் உற்பத்தியாகும் மனித உடலை கொசுக்கள் மிகவும் விரும்பும். ஏனெனில் சாக்கரின் மனிதர்ககளின் சருமம் மீது இனிக்கும்.

ஸ்டீராய்ட்ஸ் & கொலஸ்ட்ரால்

ஸ்டீராய்ட்ஸ் & கொலஸ்ட்ரால்

தங்கள் சரும மேற்பரப்பின் மீது ஸ்டீராய்ட்ஸ் அல்லது கொலஸ்ட்ரால் செறிவு அதிகமாக இருப்பவர்களாலும் கொசுக்கள் அதிகமாக ஈர்க்கப்படும். அதற்காக கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களை தான் கொசுக்கள் தாக்கும் என்றெல்லாம் இல்லை. இவ்வகையானவர்களின் உடல் கொலஸ்ட்ரால் செயல்பாட்டில் மிக சிறப்பாக செயல்படும். இதனால் மிஞ்சிய துணைப்பொருட்கள் சரும மேற்பரப்பின் மீது பதிந்து விடும்.

அமிலங்கள்

அமிலங்கள்

யூரிக் அமிலம் போன்ற சில குறிப்பிட்ட அமிலங்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பவர்களின் மீதும், கொசுக்கள் அதிகமாக தாக்குதல் நடத்தும். இவ்வகையான அமிலங்கள் கொசுக்களின் உணர்வை தூண்டிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Do Mosquitoes Bite Some People And Not Others?

Some people are real mosquito magnets. Why do some people seem to attract bloodthirsty mosquitoes from all over the neighborhood, while others can sit outside all evening without suffering a bite?
Subscribe Newsletter