Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சன்டே ஸ்பெஷல் பாலக் க்ரீன் சிக்கன் 65 - எப்படி செய்றது-ன்னு பாத்து மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!
Palak Green Chicken 65 Recipe In Tamil: பொதுவாக ஞாயிற்றுக்கிழமை வந்தா பலரது வீட்டில் சிக்கன் தான் சமைத்து சாப்பிடுவார்கள். ஏனெனில் சிக்கன் விலைக் குறைவு மற்றும் நிறைய பேரின் விருப்பமான உணவுப் பொருளும் கூட. சிக்கனைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். ஆனால் என்ன தான் சிக்கனை பலவிதமாக சமைத்து சாப்பிட்டாலும், சிக்கன் 65 இல்லாமல் சன்டே முழுமையடையாது.
அந்த அளவில் சிக்கன் 65 பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் 65 செய்யாமல், சற்று வித்தியாசமாக பாலக் கீரை பயன்படுத்தி, க்ரீன் சிக்கன் 65 செய்து பாருங்கள். சுவையும் பிரமாதமாக இருக்கும். கீரையும் சாப்பிட்டது போன்று இருக்கும். இந்த க்ரீன் சிக்கன் 65 செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம்.

இந்த பாலக் க்ரீன் சிக்கன் 65 ரெசிபி வந்தனாசமையல் என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு பாலக் க்ரீன் சிக்கன் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக் க்ரீன் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பாலக் கீரை - 1 கட்டு (நீரில் 8 நிமிடம் வேக வைத்தது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 2
* கெட்டி தயிர் - 1 கப்
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 3/4 ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* சோள மாவு - 2 ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பசலைக்கீரையை சேர்த்து, 8 நிமிடம் ஊற
வைத்து எடுத்து மிக்சர் ஜாரில் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 இன்ச் இஞ்சி, 5 பூண்டு, 1 கைப்பிடி கொத்தமல்லி, 1
கைப்பிடி புதினா, 2 பச்சை மிளகாய் மற்றும் 1 கப் கெட்டி தயிரை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், கரம் மசாலா,
குழம்பு மிளகாய் தூள், அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டி, 1/2 மணிநேரம்
மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்த சிக்கன்
துண்டுகளை சேர்த்து, சிறிது கறிவேப்பிலையை தூவி, நன்கு பொரித்து
எடுத்தால், சுவையான பாலக் க்ரீன் சிக்கன் 65 ரெசிபி தயார்.



Click it and Unblock the Notifications